ஜப்பானில் நெருக்கடி நிலை அறிவிக்கப்படலாம்

ஜப்பானில் நெருக்கடி நிலை அறிவிக்கப்படலாம்

1 mins read
62fb84eb-76bd-44a8-a3c1-e4f86e604f57
தோக்­கியோ: ஜப்­பா­னில் கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த அந்­நாட்­டுப் பிர­த­மர் ஷின்ஸோ அபே (படம்) இன்று நெருக்­கடி நிலையை அறி­விக்­கக்­கூ­டும். அது ஒரு மாத காலத்­திற்கு நடப்­பில் இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

தோக்­கியோ: ஜப்­பா­னில் கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த அந்­நாட்­டுப் பிர­த­மர் ஷின்ஸோ அபே (படம்) இன்று நெருக்­கடி நிலையை அறி­விக்­கக்­கூ­டும். அது ஒரு மாத காலத்­திற்கு நடப்­பில் இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஜப்­பா­னில் கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த நெருக்­கடி நிலையை அறி­விக்­கும் அதி­கா­ரத்­தைப் பிர­த­ம­ருக்கு வழங்­கும் வித­மாக அர­ச­மைப்­புச் சட்­டம் கடந்த மாதம் திருத்­தி­ய­மைக்­கப்­பட்­டது.

கிரு­மித்­தொற்­றால் பேரா­பத்து ஏற்­படும் நிலை­யிலோ, பொரு­ளி­யல் மோச­மா­கப் பாதிக்­கப்­படும் நிலை­யிலோ பிர­த­மர் அபே நெருக்­கடி நிலையை அறி­விக்க அது வகை­செய்­கிறது.

நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதித்தால் வர்த்தகங்கள் மற்றும் பொருளியல் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எண்ணிய திரு அபே, நெருக்கடி நிலையை அறிவிக்க தயக்கம் காட்டி வந்தார். எனினும், கிருமித்தொற்று நிலவரம் மோசமடைவதைத் தவிர்க்க கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி திரு அபேவுக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டது.

ஜப்­பா­னில் இது­வரை 3,500 பேருக்­கும் அதி­க­மா­னோ­ருக்கு கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 85ஆக உள்­ளது.

மற்ற நாடு­க­ளு­டன் ஒப்­பு­நோக்க, ஜப்­பா­னில் பாதிப்பு குறைவு என்­றா­லும், தலை­ந­கர் தோக்­கி­யோ­வில் அண்­மை­யில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வது அர­சாங்­கத்­திற்கு கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தோக்­கி­யோ­வில் 1,000க்கும் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

நெருக்­க­டி­நிலை அறி­விக்­கப்­பட்­டால், மோச­மாக பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் பொது­மக்­கள் வீட்­டி­லேயே தங்­கி­யி­ருக்­கும்­ப­டி­யும் வர்த்­த­கங்­களை மூடும்­ப­டி­யும் பொது நிகழ்ச்­சி­களை ரத்­து­ செய்­யும்­ப­டி­யும் உத்­த­ர­வி­டப்­ப­ட­லாம்.

இந்­நி­லை­யில், ஜப்­பா­னில் நூற்­றுக்­க­ணக்­கான பில்­லி­யன் வெள்ளி மதிப்­பி­லான உத­வித் திட்­டம் இவ்­வா­ரம் அறி­விக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.