மாண்டவர்கள் எண்ணிக்கை முதன்முறையாக குறைந்தது

மாண்டவர்கள் எண்ணிக்கை முதன்முறையாக குறைந்தது

2 mins read
bdc45de7-d343-4fe4-9d61-791ecaac3143
வெறிச்சோடிக் கிடக்கும் நியூயார்க் நகரின் டைமஸ் ஸ்கொயர். படம்: ஏஎஃப்பி -

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் கொரோனா கிரு­மித் தொற்­றின் கோரப்­பி­டி­யில் சிக்­கி­யுள்ள நக­ரங்­கள் சில­வற்­றில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 'சம­நி­லையை' எட்­டும் நம்­பிக்கை தெரி­வ­தாக அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப் தெரி­வித்­துள்­ளார்.

அமெ­ரிக்­கர்­கள் இரு­ளின் முடி­வில் ஓர் ஒளி­யைப் பார்க்­கத் தொடங்­கி­யுள்­ள­னர் என்­றும் அவர் சொன்­னார்.

அமெ­ரிக்­கா­வில் மிக­வும் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள நியூ­யார்க் மாநி­லத்­தில், ஞாயிற்­றுக்­கி­ழ­மை­அன்று மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 600ஆகப் பதி­வா­னது.

ஆயி­னும் மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை அந்த வாரத்­தில் முதன்­மு­றை­யாக முந்­திய நாளை­விட குறை­வாக பதி­வா­னது குறிப்­பி­டத்­தக்­கது. இதோடு நியூ­யார்க்­கில் மாண்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 4,159ஆக உள்­ளது.

மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை சற்று குறைந்­துள்­ள­தைச் சுட்டி பேசிய டிரம்ப், "அது ஒரு நல்ல அறி­கு­றி­யாக இருக்­க­லாம்," என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

"நம்­பிக்கை ஒளி தெரி­யத் தொடங்­கி­யுள்­ளது. ஆனால், இறப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக உள்­ள­தால் நாம் ஒரு போதும் மகிழ்ச்சி அடை­யக் கூடாது," என்­றார் டிரம்ப்.

நியூ­யார்க், மிச்­சி­கன் மற்­றும் லூசி­யானா போன்ற இடங்­களில் இறந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை மற்ற மாநி­லங்­களில் வரு­வ­தற்­கான சிக்­க­லின் அறி­கு­றி­யா­கும் என்று அர­சாங்க அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, பென்­சில்­வே­னியா, கொல­ராடோ, வாஷிங்­டன் மாநி­லங்­களில் கிரு­மித் தொற்­றால் உயி­ரி­ழப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யுள்­ளது.

"நாடு முழு­வ­தும் இந்த நிலை வரப்­போ­கிறது. அமெ­ரிக்­கர்­கள் அதைப் புரிந்து கொள்ள வேண்­டும் என்று நான் விரும்­பு­கி­றேன்," என்று எச்­ச­ரித்­துள்­ளார் அமெ­ரிக்க தலைமை அறுவை சிகிச்சை மருத்­து­வர் ஜெரோம் ஆடம்ஸ்.

மேலும் பியல் ஹார்­பர், இரட்டை கோபு­ரத் தாக்­கு­தல் ஆகி­ய­வற்­றின் போது அனு­ப­வித்த வேத­னை­க­ளைப் போன்று வரும் சில வாரங்­களில் அமெ­ரிக்க மக்­கள் அனு­ப­விக்­கப்­போ­கி­றார்­கள் என்­றும் அவர் சொன்­னார்.

அமெ­ரிக்­கா­வில் கிரு­மித் தொற்­றுக்கு இது­வரை 9,100 பேர் மாண்­டு­விட்­ட­னர். 321,000 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

அடுத்து வரும் வாரங்­களில் ஒரு லட்­சம் முதல் 2 லட்­சம் அமெ­ரிக்க மக்­கள் உயி­ரி­ழக்­கக் கூடும் என வெள்ளை மாளிகை மருத்­துவ நிபு­ணர்­கள் எச்­ச­ரித்து

உள்­ள­னர்.