ஷார்ஜாவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை; 200,000 பேருக்கு பரிசோதிக்க இலக்கு

ஷார்ஜாவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை; 200,000 பேருக்கு பரிசோதிக்க இலக்கு

1 mins read
4bdd6634-b9c6-4338-a5c1-24d4c4f13367
ஐக்கிய அரபு சிற்றரசின் பொதுத்துரையில் பணிபுரியும் இந்திய ஊழியர்கள் பாதுகாப்புக் கவசங்களுடன். படம்: ஏஎஃப்பி -

வடக்கு எமிரேட்சில் உள்ள சுமார் 200,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள ஐக்கிய அரபு சிற்றரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

அல் கைமா, அல் குவைன், அஜ்மன், ஷர்ஜா போன்ற பகுதிகளில் ஊழியர்கள் தங்குமிடத்திலும் வேலையிடங்களிலும் இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த வியாழக்கிழமை தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே 10,000க்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தப் பரிசோதனைகளின்போது, அறிகுறிகள் தென்பட்டதாக 57 ஊழியர்கள் மேற்கொண்டு பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் 90 சுகாதாரத்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஊழியர்களின் உடல் வெப்பநிலை, சுவாச விகிதம், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவை பரிசோதிக்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்