அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக அடுக்கடுக்காக பலர் மாண்டு வருவதால் அங்கிருக்கும் பிணவறைகளில் இடமில்லாமல் போய்விட்டதாக அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
இதனால் நியூயார்க் நகரின் சுகாதாரத் துறை அதிகாரகள் செய்வதறியாது தவிக்கின்றனர். அதனால், மாண்டோர் உடல்களைக் குளிர்பதன வசதியுடனான லாரிகளில் வைப்பதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
நேற்றைய நிலவரப்படி நியூயார்க்கில் 3,485 உயிரிழந்தனர்.
இதற்கிடையே, நியூயார்க்கில் உள்ள பெரிய தேவாலயம் ஒன்று தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

