மலேசியாவில் ஆசிரியர், 20 மாணவர்களுக்கு கிருமித்தொற்று; 70 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

மலேசியாவில் ஆசிரியர், 20 மாணவர்களுக்கு கிருமித்தொற்று; 70 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

1 mins read
a6057db5-3881-405e-a1ca-493c8c803ec3
தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடம் ஒன்றிற்குள் நுழைய விடாமல் தடுக்க கம்பித் தடுப்புகளை அமைக்கும் மலேசிய ராணுவத்தினர். படம்: இபிஏ -

மலேசியாவின் மலாக்காவில் 'கொவிட்-19 சிவப்பு பகுதியாக' அறிவிக்கப்பட்டுள்ள ஜாசினில் உள்ள சமயப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களில் சிலருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதையடுத்து, அந்த பள்ளியைச் சேர்ந்த சுமார் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்தப் பள்ளியில் ஓர் ஆசிரியர், 20 மாணவர்கள் ஆகியோருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் அனைவரும் அலோர் கஜாவில் உள்ள தடைகாப்பு நிலையத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த மாணவர்களுக்கு ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசல் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள் 14 நாட்களுக்குத் தடைகாப்பு ஆணையைப் பூர்த்தி செய்வர் என்று ஜாசின் ஓசிபிடி துணை கண்காணிப்பாளர் மிஸ்பானி ஹம்டன் இன்று (ஏப்ரல் 7) தெரிவித்தார். அந்த மாணவர்கள் 13 முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளாது.

இந்நிலையில், மலேசியாவில் இன்று புதிதாக 170 பேருக்கு கிருமித்தொற்று பதிவானது. அதனையடுத்து அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,963 ஆகியுள்ளது.

இன்று ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆகியுள்ளது.

இன்று மேலும் 80 பேர் குணமடைந்ததையடுத்து, மொத்தம் 1.321 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 92 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அவர்களில் 50 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்