இத்தாலியில் இருந்து வந்த கைதியால் மற்ற சிறை கைதிகளுக்குத் தொற்று

இத்தாலியில் இருந்து வந்த கைதியால் மற்ற சிறை கைதிகளுக்குத் தொற்று

1 mins read
67f4ff67-c4f3-4285-9b68-0d02cebae454
பாகிஸ்தானில் கொரோனா கிருமித் தொற்றில் இருந்து காத்துக்கொள்ள தேவையான பாதுகாப்புச் சாதனங்கள் இல்லையென போராட்டத்தில் குதித்த 50க்கும் மேற்பட்ட மருத்துவர்களை போலிசார் கைது செய்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

லாகூர்: பாகிஸ்­தான் சிறை­யில் இருக்­கும் சுமார் 50 கைதி­க­ளுக்கு கிரு­மித் தொற்­றி­யுள்­ள­தாக லாகூர் மாகாண அமைச்­சர் ஒரு­வர் டுவிட்­ட­ரில் தெரி­வித்­துள்­ளார்.

போதைப்­பொ­ருள் கடத்­தல் தொடர்­பாக இத்­தாலி சென்று திரும்பிய ஒரு­வர் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் அவ­ரி­டம் இருந்து மற்­ற­வர்­க­ளுக்­குத் தொற்­றி­யி­ருக்­க­லாம் என்­றும் கூறப்­ப­டு­கிறது. மார்ச் 23ஆம் தேதி அவ­ருக்­குக் கிரு­மித் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.