ஸ்பெயினில் அன்றாட உயிரிழப்பு அதிகரிப்பு

1 mins read
cefb1c9b-f73c-427f-988c-6ff052b2c607
பொது வாழ்­வில் பல கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை விதித்­தும் கிரு­மிப் பர­வலை எதிர்­கொள்­வ­தில் ஸ்பெ­யின் சிர­மத்தை எதிர்­கொள்­கிறது.  ஸ்பெயினில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள். படம்: ஏஎஃப்பி -

மட்­ரிட்: ஸ்பெ­யி­னில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக அன்­றாட உயி­ரி­ழப்­பு­கள் அதி­க­ரித்­தி­ருக்­கிறது.

அங்கு நிலைமை இன்­னும் கட்­டுக்­குள் வர­வில்லை என்­பதை இது காட்­டு­கிறது.

கடந்த 24 மணி நேரத்­தில் ஸ்பெ­யி­னில் மேலும் 5,478 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மைக்­குப் பிறகு இதுவே ஆக அதி­க­மான எண்­ணிக்கை. ஸ்பெ­யி­னில் இது­வரை மொத்­தம் 140,510 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

மரண எண்­ணிக்கை 743ஆக அதி­க­ரித்து 13,798ஐ எட்­டி­யது. கடந்த சனிக்­கி­ழ­மைக்­குப் பிறகு இதுவே ஆக அதி­க­மான மரண எண்­ணிக்கை.

இருப்­பி­னும், கடந்த வாரத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் ஸ்பெ­யி­னில் பதி­வாகி உள்ள மரண எண்­ணிக்கை குறைந்­துள்­ளது.

பொது வாழ்­வில் பல கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை விதித்­தும் கிரு­மிப் பர­வலை எதிர்­கொள்­வ­தில் ஸ்பெ­யின் சிர­மத்தை எதிர்­கொள்­கிறது.