கசபிலாங்கா: முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்குச் செல்வோருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் 102 பவுண்டு வரை அபராதமும் விதிக்கப்படும் என்று மொரோக்கோ அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய விதிமுறை நேற்று தொடங்கியது.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக இம்மாதம் நடுவிலிருந்து மொரோக்கோவில் முடக்கநிலை நடைமுறையில் உள்ளது.
அடுத்த வாரத்திலிருந்து ஒரு நாளுக்கு ஏறத்தாழ ஆறு மில்லியன் முகக்கவசங்களை உற்பத்தி செய்ய மொரோக்கோ திட்டமிட்டுள்ளது.
தற்போது ஒருநாளுக்கு 3.3 மில்லியன் முகக்கவசங்களை அது உற்பத்தி செய்கிறது.
மொரோக்கோவில் இதுவரை 1,141 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. 83 பேர் உயிரிழந்துள்ளனர்.

