மனித நேயத்­தின் அடிப்­ப­டை­யில் மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா தடையைத் தளர்த்தியது

மனித நேயத்­தின் அடிப்­ப­டை­யில் மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா தடையைத் தளர்த்தியது

2 mins read
569c61ad-0cd0-402f-8e1b-73a459d22056
கொரோனா கிருமித் தொற்றுக்கு சிகிச்­சை­ய­ளிக்­கப் பயன்­ப­டுத்­தப்­படும் மருந்தை, தாங்­கள் கேட்­ட­படி இந்­தியா கொடுக்க முன்­வராவிட்­டால், தக்க பதி­லடி கொடுக்­கப்படும் என்று டிரம்ப் நேற்­று­முன்­தி­னம் எச்­சரித்தி­ருந்­தார்.  படம்: ஏஎப்பி -

புது­டெல்லி: கொரோனா கிருமி பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு உத­வும் ஹைட்­ராக்­ஸி­கு­ளோரோ குயின் மருந்தை மனித நேயத்­தின் அடிப்­ப­டை­யில் உலக நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்ய உள்­ள­தாக இந்­தியா தெரி­வித்­துள்­ளது.

"24 மருந்துப் பொருட்கள் மற்றும் மூலக்கூறுகள் மீது இந்திய மத்திய அரசு விதித்திருந்த ஏற்றுமதி தடை ரத்து செய்யப்பட்டு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

"இந்த தடை நீக்க அனுமதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு பயந்து அல்ல, மனிதாபிமானத்தின் அடிப்ப டையில் எடுக்கப்பட்டட முடிவு," என்றும் இந்திய அரசு கூறியுள்ளது.

உயிர்க்­கொல்லி கிரு­மி­யான கொரோ­னா­வால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு­க­ளுக்­கும் தன்னை நம்­பி­யுள்ள அண்டை நாடு­க­ளுக்­கும் மனி­தா­பி­மா­னத்­தின் அடிப்­ப­டை­யில் பார­சிட்­ட­மால், ஹைட்­ராக்­ஸி­கு­ளோ­ரோ­கு­யின் உள்­ளிட்ட மருந்­து­களை ஏற்­று­மதி செய்ய மத்­திய அரசு அனு­மதி அளித்­துள்­ள­தாக வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.

உல­கத்­தில் நேற்று மாலை நேரத்­து­டன் 75,000 பேரின் உயி­ரைப் பறித்­துள்ள கொரோனா கிரு­மியை அழிப்பதற்கு ஏதுவாக 24 மருந்­து­க­ளின் ஏற்­று­ம­தி தடையை மத்­திய அரசு தளர்த்­தி­யுள்­ளது.

கொரோனா வைர­ஸுக்கு சிகிச்­சை­ய­ளிக்­கப் பயன்­ப­டுத்­தப்­படும் மருந்தை, தாங்­கள் கேட்­ட­படி இந்­தியா கொடுக்க முன்­வராவிட்­டால், தக்க பதி­லடி கொடுக்­கப்படும் என்று டிரம்ப் நேற்­று­முன்­தி­னம் எச்­சரித்தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்கா உள்­ளிட்ட அண்டை நாடு­களின் தேவைக்கு ஏற்ப ஹைட்­ராக்சி குளோ­ரோ­கு­யின் மருந்தை ஏற்­று­மதி செய்ய இந்­தியா முடிவு செய்­தி­ருப்­ப­தாக ஏஎன்ஐ ஊட­கத் தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன.

அமெ­ரிக்­கா­வில் வேக­மா­கப் பரவி வரும் கொரோனா நோய்த்­தொற்­றுக்கு 3,67,000 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனா். இது­வரை 11,000 பேர் உயி­ரி­ழந்­து­விட்­டனா். அடுத்த சில வாரங்­களில் ஆயி­ரக்­க­ணக்­கில் உயி­ரி­ழப்பு அதி­க­ரிக்­கக் கூடும் என்றும் அஞ்­சப்­ப­டு­கிறது.