ஜோகூர்: தடை மீறிய 1,044 பேர் கைதாயினர்

2 mins read
21e99685-4c82-4a58-951c-59abcb659ef7
மலே­சி­யா­வின் ஜோகூ­ரில் பொது­மக்­கள் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவை மீறி­ய­தற்­காக கைதா­னோர் எண்­ணிக்கை 1,044 ஆகி­யது என்று அந்த மாநி­லத்­தின் போலிஸ் தலை­மைத் தள­பதி டத்தோ அயோப் கான் மைதீன் கூறி­னார். படம்: தி ஸ்டார், மலேசியா -

ஜோகூர்: மலே­சி­யா­வின் ஜோகூ­ரில் பொது­மக்­கள் கட்­டுப்­பாட்டு உத்­த­ரவை மீறி­ய­தற்­காக கைதா­னோர் எண்­ணிக்கை 1,044 ஆகி­யது என்று அந்த மாநி­லத்­தின் போலிஸ் தலை­மைத் தள­பதி டத்தோ அயோப் கான் மைதீன் கூறி­னார்.

அந்த விதியை மீறி கைதா­ன­வர்­களில் 554 பேர் மீது ஏற்­கெ­னவே நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப் பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

கைதான அனை­வ­ரும் சட்­டத்­தின் பல பிரி­வு­க­ளின் கீழ் விசா­ரிக்­கப்­ப­டு­வர் என்று அறிக்கை ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டார். குற்­ற­வா­ளி­க­ளுக்கு இரண்டு ஆண்­டு­வரை சிறை­யும் 1,000 ரிங்­கிட் அப­ரா­த­மும் விதிக்­கப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார். பொது­மக்­கள் நட­மாட்ட கட்­டுப்­பாட்டை மீறு வோருக்கு எதி­ராக போலிஸ் கடும் நட­வ­டிக்கை எடுக்­கும் என்­றும் அவர் எச்­ச­ரித்­தார்.

இத­னி­டையே, மலே­சி­யா­வின் பிர­பல நடி­கை­யான புத்ரி ஆயி­ஷா­வுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ள­தாக தக­வல்­கள் தெரி­வித்­தன.

அந்த நடி­கை­யின் நிர்­வா­கி­யான அமான் டாங்­கின் இன்ஸ்ட கிராம் பக்­கத்­தில் ஏப்­ரல் 7 ஆம் தேதி­யன்று இந்த அறி­விப்பு இடம் பெற்­றது. நடிகை உட­லில் கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­குறி எது­வும் தெரி­ய­வில்லை என்­றும் இமான் தெரி­வித்­த­தாக ஹரி­யான் மெட்ரோ குறிப்­பிட்­டது. நடிகை ஆயிஷா, 25, படப்­பி­டிப்பு தொடர்­பில் மார்ச் 9ல் ஸ்காட்­லாந்து சென்­று­வந்­தார்.

இவ்­வே­ளை­யில், சிங்­கப்­பூ­ரில் இருந்து திரும்­பும் மலே­சி­யர்­கள், தங்­க­ளுக்கு கொரோனா தொற்று இல்லை என்­ப­தைக் காட்­டும் மருத்­து­வச் சான்­றி­த­ழைக் கட்­டா­யம் தாக்­கல் செய்­ய­வேண்­டும் என்று மலே­சிய அரசு அறி­வித்­துள்­ளது.

இந்த விதியை முற்­றி­லும் கடைப்­பி­டிக்­கும்­படி ஜோகூர் குடி­நுழை­வுத் துறைக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அத்­த­கைய சான்­றி­தழைக் கொண்­டு­வ­ரா­த­வர்­கள் ஜோகூ­ரில் 14 நாட்­கள் தனித்து வைக்­கப்­ப­டு­வார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.