கொவிட்19: தென்கொரியா, ஹாங்காங், மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ்

கொவிட்19: தென்கொரியா, ஹாங்காங், மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ்

2 mins read
eb5bfd30-497f-445a-a4ba-c873486cab9a
தென்கொரிய அரசு, கொரோனா கிருமித்தொற்று காரணமாக வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.  படம்: இபிஏ -

தென்கொரியா: புதிய கட்டுப்பாடு, $42பி. உதவி

சோல்: தென்கொரிய அரசு, கொரோனா கிருமித்தொற்று காரணமாக வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மேலும் $42.2 பில்லியன் மதிப்புள்ள குறைந்த வட்டி கடன்கள் வழங்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் அறிவித்து இருக்கிறார். கொரி­யன்ஏர் நிறுவனம் தனது 19,000 ஊழி­யர்­களில் 70% ஊழி யரை விடுப்­பில் அனுப்­புகிறது.

ஹாங்காங்: $5.53 பி. ஊக்குவிப்பு

ஹாங்காங்: ஹாங்காங் அரசாங்கம், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் $5.53 பில்லியன் (HK30 பில்லியன்) உதவித் திட்டத்தை அறிவிக்க முடிவு செய்தது. அங்கு அழகு நிலையங்கள், உடம்புப்பிடி நிலையங்களை மூடிவிட்டது. மூடப்பட்ட இதர இடங்களில் தடை நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, ஹாங்காங்கில் கடைகளில் முகக்கவசங்கள் கிடைப்பதை அடுத்து அங்குள்ள வெளிநாட்டினர் அவற்றை வாங்கி தங்கள் ஊர்களுக்கு அனுப்புகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

மலேசியா: புதிதாக 2 பேர் பலி

கோலாலம்பூர்: மலேசியாவில் புதிதாக 156 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அவர்களையும் சேர்த்து மொத்தம் 4,119 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தக் கிருமித்தொற்று காரணமாக புதிதாக இருவர் மாண்டுவிட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இந்தோனீசியா: புதிதாக 218 பேருக்குக் கிருமித்தொற்று

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கொரோனா கிருமித்தொற்று மேலும் 218 பேரை பாதித்துவிட்டது என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இந்தோனீசியாவில் மொத்தம் 2,956 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 240 பேர் மாண்டு இருக்கிறார்கள். 222 பேர் குணமடைந்து இருக்கிறார்கள் என்று சுகாதார அமைச்சு அதிகாரி யுரியாந்தோ கூறினார்.

பிலிப்பீன்ஸ்: மேலும் ஐவர் பலி

மணிலா: பிலிப்பீன்சில் நேற்று புதிதாக ஐந்து பேர் கொரோனா கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டார்கள் என்றும் அந்தக் கிருமி புதிதாக 106 பேரைத் தொற்றி விட்டது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது. அந்த நாட்டில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக 182 பேர் மாண்டு இருக்கிறார்கள். 3,870 பேர் பாதிக்கப் பட்டும் 96 பேர் குணமடைந்தும் உள்ளனர்.