ரயில் சேவைகள் தொடக்கம்; வூஹானில் குவிந்த பயணிகள்

1 mins read
96205e44-cb98-4f0b-a1cd-164b12347ac5
வூஹானில் ஹனாகோ ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் முதல் ரயிலில் பயணம் செய்ய பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்கள் அணிந்தபடி செல்லும் மக்கள். படம்: ஏஎஃப்பி -

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் நேற்று இயல்பு நிலை முழுவதுமாக திரும்பியதைத் தொடர்ந்து, அங்கு ரயில் சேவை இயங்கத் தொடங்கியது. அதையடுத்து ரயில் நிலையங்களில் குவிந்த மக்கள் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இதனால் ரயில்களில் மக்கள் கூட்டம் குவிகிறது. வூஹானில் ஹனாகோ ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் முதல் ரயிலில் பயணம் செய்ய பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்கள் அணிந்தபடி செல்லும் மக்கள். படம்: ஏஎஃப்பி