செயற்கை பிராணவாயுவின் உதவியோடு போரிஸ் ஜான்சன்

செயற்கை பிராணவாயுவின் உதவியோடு போரிஸ் ஜான்சன்

1 mins read
de1cd9b0-db43-405d-9c18-99223ce65133
கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள பிரிட்­டன் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் செயற்கை பிரா­ண­வாயு  உத­வி­யோடு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரி­வில் இருக்­கி­றார். படம்: ராய்ட்டர்ஸ் -

லண்­டன்: கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள பிரிட்­டன் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் செயற்கை பிரா­ண­வாயு உத­வி­யோடு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரி­வில் இருக்­கி­றார்.

இந்த நிலை­யில், அவ­ரு­டைய பொறுப்­பி­லி­ருந்து எடுக்­கப்­பட வேண்­டிய முக்­கிய முடி­வு­கள் எப்­படி எடுக்­கப்­படும் என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு தொற்று உறுதி செய்­யப்­பட்ட 55 வயது ஜான்­ச­னின் உடல் வெப்­ப­நிலை அதி­க­ரித்­த­தை­ய­டுத்து ஞாயிற்­றுக்­கி­ழமை மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட அவர் திங்­க­ளன்று தீவிர சிகிச்சை பிரி­வுக்கு மாற்­றப்­பட்­டார்.

செயற்கை பிரா­ண­வா­யு­வின் உத­வி­யோடு இருக்­கும் ஜான்­ச­னுக்­கு சுவா­ச கருவி எனும் வென்­டி­லேட்­ட­ரின் உதவி தேவைப்­ப­ட­வில்லை. நிய­மிக்­கப்­பட்ட துணை பிர­த­ம­ரும் வெளி­யு­றவு செய­லா­ள­ரு­மான டோமி­னிக் ராப், ஜான்­ச­னின் உடல்­நிலை சீராக உள்­ள­தாகவும் விரை­வில் அவர் பணிக்­குத் திரும்­பு­வார் என்­றும் கூறி­னார்.

இதற்­கி­டையே, நெருக்­க­டி­யான இந்த நிலை­யில் பிரிட்­டன் எவ்­வ­ளவு காலத்­திற்கு முடக்­கப்­பட வேண்­டும் என்­ப­தை­யும் அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய நீண்­ட­கால தாக்­கங்­க­ளை­யும் குறித்து பிரிட்­டன் அமைச்­சர்­கள் விவா­தித்­த­னர்.

ராப்­பிற்கு ஜான்­சன் சில அதி­கா­ரங்­க­ளைக் கொடுத்­தி­ருந்­தா­லும் முடக்க உத்­த­ர­வைத் திரும்­பப் பெறு­வது போன்ற முக்­கிய முடி­வு­களை எடுக்க அவ­ருக்கு அதி­கா­ரம் கிடை­யாது என்­றும் அதற்கு அமைச்­ச­ர­வை­யின் ஒப்­பு­தல் தேவை என்­­றும் கூறுகின்றனர் இங்­கி­லாந்து அர­சி­யல் தலை­வர்­கள்.