உலக சுகாதார அமைப்பை மிரட்டும் டிரம்ப்

1 mins read
07aa6c9a-735e-4564-863e-1376357df330
-

வாஷிங்டன்: கொவிட்-19 கிருமிப் பரவல் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாகச் சாடிய டிரம்ப், அந்த அமைப்புக்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியை நிறுத்த போவதாக மிரட்டியுள்ளார்.

கொவிட்-19 நெருக்­கடி நிலை­யைச் சமா­ளிக்கத் தான் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளைத் தற்­காத்துப் பேசிய டிரம்ப், கிரு­மித் தொற்று பர­வல் குறித்து எச்­ச­ரிப்­ப­தில் உலக சுகா­தார நிறு­வ­னம் மெது­வாகச் செயல்­பட்­ட­தாகச் சாடி­னார்.

மேலும் சீனா­வுக்கு ஆத­ர­வாக உலக சுகா­தார அமைப்பு செயல்

­ப­டு­வ­தா­க­வும் அவர் ஆவே­ச­ம­டைந்­தார்.

"அனைத்­து­லக பய­ணத்­தைத் தடை செய்ய நான் முன்பே எடுத்த முடிவை உல­கச் சுகா­தார அமைப்பு விமர்­ச­னம் செய்து, தவ­றான தக­வ­லைப் பரப்­பி­விட்­டது­.

"நிறைய விஷ­யங்­களில் உல­கச் சுகா­தார அமைப்பு தவறு செய்துவிட்­டது. நிறைய தக­வல்­கள் அவர்­க­ளுக்­குக் கிடைத்­தும் அவர்­கள் அத­னை உலகிற்குத் தெரி­விக்காமல், சீனா­வுக்கு ஆத­ர­வா­கச் செயல்­பட்­ட­னர்.

"உலகச் சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா 58 மில்லியன் டாலர் நிதியளித்து வருகிறது. ஆனால் இதனை மறு பரிசீலனை செய்ய விரும்புகிறேன். அமைப்பிற்குக் கொடுக்கும் நிதியை நிறுத்தி வைக்கப் போகிறேன்," என்று மிரட்டல் விடுத்துள்ளார் டிரம்ப்.