மாண்டவர்களில் அதிகம் பேர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்

மாண்டவர்களில் அதிகம் பேர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்

1 mins read
b12471b0-4cd1-4ca2-88c1-fc433d658919
கிரு­மித் தொற்­றால் அமெ­ரிக்­கா­வில் நேர்ந்­துள்ள உயி­ரி­ழப்­பு­களில் ஆப்­பி­ரிக்க அமெ­ரிக்­கர்­கள் அதி­கம்  பேர் பலி­யா­ன­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். படம்: ராய்ட்டர்ஸ் -

ஆஸ்­டின்: கிரு­மித் தொற்­றால் அமெ­ரிக்­கா­வில் நேர்ந்­துள்ள உயி­ரி­ழப்­பு­களில் ஆப்­பி­ரிக்க அமெ­ரிக்­கர்­கள் அதி­கம் பேர் பலி­யா­ன­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அமெ­ரிக்­கா­வின் லூசி­யானா, மிச்­சி­கன் மற்­றும் இலி­னாய்ஸ் ஆகிய மாநி­லங்­களில் கிடைத்த முதற்­கட்ட தக­வ­லின்­படி இவ்­வாறு கூறப்­பட்­டுள்­ளது.

லூசி­யா­னா­வில் ஏற்­பட்ட 512 உயி­ரி­ழப்­பு­களில் 70 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் ஆப்­பி­ரிக்க அமெ­ரிக்­கர்­கள் என்று கூறி­யுள்­ளார் அதன் ஆளு­நர் ஜான் எட்­வட்ஸ்.

அது­போல் மிச்­சி­க­னில் கிரு­மித் தொற்றால் மாண்­ட­வர்­களில் 40 விழுக்­காட்­டி­னர் ஆப்­பி­ரிக்க அமெ­ரிக்­கர்­கள்.

ஆப்­பி­ரிக்க அமெ­ரிக்­கர்­க­ள் அதி­கம் உயி­ரி­ழப்­ப­தற்குச் சுகா­தார சேவை கிடைப்­ப­தில் உள்ள ஏற்­றத் தாழ்­வு­கள் முக்­கிய கார­ண­மா­கக் கூறப்­ப­டு­கிறது.

இது­த­விர ஆப்­பி­ரிக்க அமெ­ரிக்­கர்­களில் அதி­க­மா­னோ­ருக்கு நீரி­ழிவு நோய், நுரை­யீ­ரல் நோய், இத­யக்­கோ­ளாறு அதி­க­மாக இருக்­கிறது.

ஏற்­கெ­னவே உடல்­ந­லக் குறைவு உள்­ள­வர்­கள் கொரோனா கிரு­மித் தொற்­றால் அதி­வே­க­மாகப் பாதிக்­கப்­ப­டு­வார்­கள் என்­ப­தால் அவர்­கள் பெரும் பாதிப்பை எதிர்­கொள்­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.