சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பும் மலேசியர்கள் தங்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்துவதும் பத்திரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்னும் அரசாங்க உத்தரவைக் கடுமையாகப் பின்பற்றுமாறு ஜோகூர் குடிநுழைவுத் துறை கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் கைருல் ஜைமீ தாவுத், ஜோகூர் மாநில குடிநுழைவுப் பிரிவு இயக்குநருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
சிங்கப்பூரில் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு கிருமித்தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டவர்கள் அதற்கான ஆவணங்களை வைத்திருந்தால் மட்டுமே 14 நாள் கட்டாயத் தனிமைப்
படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவர் என்று அக்கடிதத்தில் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து சென்ற ஏராளமான மலேசியர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவர்களிடம் ஆவணங்கள் இருந்தபோதிலும் ஜோகூர் பாருவில் உள்ள அரசாங்க தனிமைப்படுத்துதல் மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அதனால் உண்மையான நிலை என்ன என்பது அறியாமல் பலரும் குழப்பத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜோகூர் அதிகாரிகளால் தடுக்கப்பட்டவர்களில் ஒருவரான டான் ஜீ யாங், 16, என்னும் மாணவர் தம்மிடம் கொவிட்-19 கிருமித் தொற்று இல்லை என்பதற்கான ஆவணம் இருந்தபோதிலும் அரசாங்க தனிமைப்படுத்துல் யைத்துக்குத் தம்மைக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான சமூக இடை வெளி நடைமுறைகள் அறிவிக்கப் பட்ட பின்னர் அதிகமான மலேசிய ஊழியர்கள் நாடு திரும்பிக்கொண்டு உள்ளனர்.

