பாதிக்கப்பட்டோரைக் காட்டிலும் மீண்டவர் எண்ணிக்கை மலேசியாவில் அதிகம்

பாதிக்கப்பட்டோரைக் காட்டிலும் மீண்டவர் எண்ணிக்கை மலேசியாவில் அதிகம்

1 mins read
13d5b56c-9c68-40fe-910e-1273652b3c1c
கோலாலம்பூருக்கு வெளியே கோம்பாக்கில் உள்ள மலேசியாவின் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகம் தயாரித்துள்ள மருத்துவ கவச உடைகளை நேற்று மருத்துவமனை தொண்டூழி யர்கள் அணிந்து, சோதித்துப் பார்த்தனர். படம்: ஏஎஃப்பி -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் நேற்று புதி­தாக 109 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­யின.

இது கடந்த இரு வாரங்­களில் பதி­வாகி இருக்­கும் ஆகக் குறை­வான எண்­ணிக்கை.

இவர்­க­ளை­யும் சேர்த்து மலே­சி­யா­வில் இது­வரை பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 4,228.

கிரு­மிப் பர­வல் தொடர்­பான ஆக அண்­மைய விவ­ரங்­களை நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம விளக்­கிய மலே­சிய சுகா­தார அமைச்­சின் தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா, தின­மும் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் குண­ம­டைந்து வீடு திரும்­பு­வோர் எண்ணிக்கை அதி­க­மாக உள்­ளது என்­றும் கடந்த இரு நாட்­க­ளாக இந்த நல்ல நில­வ­ரம் தொட­ரு­கிறது என்­றும் கூறி­னார்.

"109 புதிய சம்­ப­வங்­கள் பதி­வான நிலை­யில் இன்று (வியா­ழக்­கி­ழமை) மட்­டும் 121 பேர் கிருமி பாதிப்­பி­லி­ருந்து முழு­மை­யா­கக் குண­ம­டைந்து வீடு திரும்பி உள்­ள­னர்.

"மேலும் இது­வரை குண­ம­டைந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 1,608. மலே­சியா முழு­வ­தும் மொத்­த­மாக பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்­கை­யில் இது 38 விழுக்­காடு. இன்று மர­ண­ம­டைந்த 23 வயது பெண்ணே கொவிட்-19 கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களில் ஆகக் குறைந்த வயதுடையவர்.

"தைராய்ட் நோயா­ளி­யான அவர் கொவிட்-19 கிரு­மித்­தொற்று பாதிக்­கப்­பட்ட இரு­வ­ரு­டன் தொடர்­பில் இருந்­தார்," என்று அவர் விளக்­கி­னார்.