ஐநா: கிருமிப் பரவல் உலக அமைதிக்கு அச்சுறுத்தல்

1 mins read
84103589-17d2-4d09-afa9-2d17922c11a1
-

வாஷிங்­டன்: கொரோனா கிரு­மிப் பர­வல் உலக அமைதி மற்­றும் நிலைத்­தன்­மைக்கு அச்­சு­றுத்­தலை விளை­விக்­கக்­கூ­டும் என்று ஐக்­கிய நாடு­கள் மன்­றத்­தின் நாடு­களை அதன் பொதுச்­செ­ய­லா­ளர்

அன்­டோ­னியோ குட்­டே­ரஸ் கூறி­யுள்­ளார்.

உலக நாடு­களை அச்­சு­றுத்தி வரும் கிரு­மித் தொற்­றால் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை குறித்து விவா­திக்க ஐநா முதன்­மு­றை­யாகக் கூடி­யது.

காணொளி வாயி­லாக நடை­பெற்ற இச்­சந்­திப்­பில், "தொற்று நோயை எதிர்த்­துப் போரா­டு­வ­தில் உலக நாடு­கள் கவ­னம் செலுத்­தும் நேரத்­தில், சமூக அமை­தி­யின்மை மற்­றும் வன்­முறை அதி­க­ரிக்­கும் வாய்ப்­புள்­ளது

"உல­கம் ஏற்­கெ­னவே மோச­மான சமூக மற்­றும் பொரு­ளா­தார தாக்­கங்­க­ளைச் சந்­தித்து வரும் நிலை­யில், அனைத்­து­லக அமைதி, பாது­காப்பை நிலை­நி­றுத்­து­வ­தில் கிரு­மித்தொற்று குறிப்­பி­டத்­தக்க அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­து­கிறது,"

"இச்­ச­ம­யத்­தில் சூழ்­நி­லையைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ளும் தீவி­ர­வாத தாக்­கு­தல்­கள், பொது

நிறு­வ­னங்­கள் மீதான நம்­பிக்கை இழப்பு, நிலை

­யற்ற பொரு­ளா­தா­ரம், அர­சி­யல் பதற்­றங்­கள் போன்ற பல்­வேறு மனித உரிமை சவால்­க­ளைத்

தற்­போ­தைய நிச்­ச­ய­மற்ற நிலை தூண்­டக்­கூ­டும் அல்­லது அதி­க­ரிக்­கச் செய்­யும்," என்று அவர்

எச்­ச­ரித்­தார்.

"இந்த நிச்­ச­ய­மற்ற சூழ­லில் மன்­றத்­தின் ஒற்­றுமை மற்­றும் உறுதி மிக­வும் முக்­கி­யம். தொற்­று­நோய்க்கு எதி­ராக வெற்­றி­பெற, நாம் அனை­வ­ரும் ஒன்­றாகச் செயல்­பட வேண்­டும்," என்­றார்.