பயணக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட பின்னர் கிருமித்தொற்று அதிகரிப்பு

பயணக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட பின்னர் கிருமித்தொற்று அதிகரிப்பு

1 mins read
7696f264-848f-4466-9bf1-f717b1e89576
பெய்ஜிங்கில் விடுதிகள். படம்: ராய்ட்டர்ஸ் -

பெய்ஜிங்: நாளைமுதல் வெளிநாட்டினர் பெய்ஜிங் ஹோட்டல்களில் அனுமதிக்கப்படுவதற்கு முன் கொரோனா கிருமிக்கான சோதனைக்கு உட்படுத்தப்படுவர். கிருமித்தொற்று இல்லை என்று உறுதியான பிறகே ஹோட்டல் அறை கொடுக்கப்படும் என்று நேற்று முன்தினம் புதிய கிருமி தடுப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் சமாளிக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்று கூறப்பட்டது.

சீனாவில் நகரங்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் புதிய கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அரசாங்கத்திற்குக் கவலை அளிக்கும் ஒன்றாக உள்ளது. அத்துடன் கிருமியால் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள். கொவிட்-19 கிருமி பரவத் தொடங்கியதாக கூறப்படும் ஹுபெய் மாநிலத்தில் ஏழு நாட்களுக்குத் தொடர்ச்சியாக எந்தவொரு புதிய கிருமித்தொற்று சம்பவமும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.