தென்கொரியாவில் கட்டுப்பாடுகளைக் கண்காணிக்கும் கைக்கருவிகள்

தென்கொரியாவில் கட்டுப்பாடுகளைக் கண்காணிக்கும் கைக்கருவிகள்

1 mins read
e0aff114-9a14-46d6-916f-f1ed256b52f7
-

சோல்: கொரோனா கிருமித்தொற்று தொடர்பில் சிலருக்கு வீட்டில் இருப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுவோர் இனி தடமறியும் கருவிகளைத் தங்கள் கைகளில் அணிந்துகொள்ள வேண்டும் என்று தென்கொரிய பிரதமர் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தப்படுவோர் பலர் கட்டுப்பாடுகளை மீறி வெளியே செல்வதாலும் அதிகாரிகளிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை நிராகரிப்பதாலும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.அரசாங்க கைபேசி செயலியுடன் இணைக்கப்பட்ட கருவி, உத்தரவை மீறுவோரின் கையில் கட்டப்படும். இதன் மூலம் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதுவரை தென்கொரியாவில் 54,000க்கும் மேற்பட்டோருக்கு வீட்டில் இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பலர் உத்தரவை மீறி வருவதால் இன்னும் இரு வாரங்களில் இந்த நடவடிக்கை நடப்புக்கு வரவுள்ளதென பிரதமர் குறிப்பிட்டார்.

தென்கொரியாவில் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டிவிட்டது.