கொரோனா கிருமித்தொற்றால் அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2108 பேர் பலி

கொரோனா கிருமித்தொற்றால் அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2108 பேர் பலி

2 mins read
026465a7-9c4d-4b06-b109-b500ba4885d1
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு பலியான தங்களின் நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தாதியர் மற்றும் சுகாதார பராமரிப்பு ஊழியர்கள். படம்: ஏஎஃப்பி -

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று ஒரே நாளில் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு இலக்­காகி 2,108 பேர் மாண்­டு­விட்­டார்­கள்.

வேறு எந்­த­வொரு நாட்­டி­லும் இது­வரை 24 மணி நேரத்­தில் மரண எண்­ணிக்கை இந்த அள­வுக்கு இருந்­த­தில்லை என்­பது ஜான்ஸ் ஹாப்­கின்ஸ் பல்­க­லைக்­க­ழக புள்ளி விவ­ரங்­கள் மூலம் தெரிய வந்­துள்­ளது.

அமெ­ரிக்­கா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு 18,777 பேர் பலி­யா­கி­விட்­டார்­கள்.

அமெ­ரிக்­கா­வில் கிருமி தொற்­றி­யோர் எண்­ணிக்கை அரை மில்­லி­யனைத் தாண்டிவிட்டது.

சிங்­கப்­பூர் நேரப்­படி சனிக்­கி­ழமை இரவு 8.30 மணி அள­வில் அமெ­ரிக்­கா­வில் 502,876 பேரை கிருமி தொற்றி இருந்­தது என்று புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­வித்­தன.

வெள்­ளிக்­கி­ழமை மட்­டும் கொரோனா கிருமியால் 35,098 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்­நி­லை­யில் சான் ஃபிரான்­சிஸ்­கோ­வில் ஆத­ர­வற்­றோர் தங்­கு­வ­தற்­கான தற்­கா­லிக முகாம் ஒன்­றில் 70 பேர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

அவர்­களில் இரு­வர் முகாம் ஊழி­யர்­கள் ஆவர்.

இம்­மு­கா­மில் 400 பேர் வரை தங்க இட­வ­சதி உள்­ள­தாக அறி­யப்­ப­டு­கிறது. கடந்த சில வாரங்­களில் இந்த எண்­ணிக்கை 144 ஆக குறைக்­கப்­பட்­டது.

பின்­னர் அனை­வ­ருக்­கும் கிருமி சோதனை செய்­யப்­பட்­டதை அடுத்து முதலில் ஐந்தாக இருந்தது பின்னர் 70 பேருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பதாக உறு­தி­யா­னது.

இத்­த­கைய தங்­கு­மி­டங்­களில் பதி­வா­கி­யுள்ள மிகப் பெரிய கிரு­மித்­தொற்று குழு­மம் இது என்று கூறப்­ப­டு­கிறது.

ஆத­ர­வற்­றோ­ருக்கு ஏற்­கெ­னவே சுவா­சப் பிரச்­சி­னை­கள் இருந்­தால், இது­போன்ற தங்­கு­மி­டங்­கள் மேலும் ஆபத்தை விளை­விக்­கக்­கூ­டும் என்று மருத்­துவ வல்­லு­நர்­கள் கூறி­யுள்­ள­னர்.

சான் ஃபிரான்­சிஸ்­கோ­வில் கிட்­டத்­தட்ட 8,000க்கும் மேற்­பட்­டோர் இவ்­வாறு ஆத­ர­வற்ற நிலை­யில் தங்க இட­மில்­லா­மல் உள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.