முடக்கநிலையை உடனே ரத்து செய்வது ஆபத்தாகிவிடும்

முடக்கநிலையை உடனே ரத்து செய்வது ஆபத்தாகிவிடும்

2 mins read
bb5f4728-6982-4056-86fb-4d3d3e4b4f0f
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியிஸஸ். படம்: ஏஎஃப்பி -

ஜெனிவா: கொவிட்-19 நெருக்­கடி தொடர்­பில் நடப்­புக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்ட கட்­டுப்­பா­டு­களை நாடு­கள் உடனே அகற்­றி­னால், ஆபத்­தான விளை­வு­க­ளைச் சந்­திக்க நேரி­டும் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் எச்­ச­ரித்­துள்­ளது.

கட்­டுப்­பா­டு­களை மெல்­லக் குறைப்­ப­தற்­கான வழி­க­ளைச் சில நாடு­கள் பரி­சீ­லித்து வந்­தா­லும் உட­ன­டி­யாக அவற்றை ரத்து செய்­வது ஆபத்­தா­னது என்று ஜெனி­வா­வில் இணை­யத்­தின்­வழி நடந்­தே­றிய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் நிறு­வ­னத்­தின் தலை­வர் டெட்­ரோஸ் அடே­னம் கேப்­ரி­யே­சஸ் கூறி­னார்.

உல­கில் கிட்­டத்­தட்ட பாதி அள­வில் மக்­கள் ஏதோ ஒரு­வகை முடக்­க­நி­லை­யால் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில் உள்­ள­னர்.

வீட்­டி­லேயே முடங்­கிக் கிடக்­கும் கட்­டுப்­பா­டு­க­ளி­லி­ருந்து விடு­ப­டு­வது குறித்து சில நாடு­கள் இப்­போதே திட்­ட­மி­டத் தொடங்­கி­விட்­டன. இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் அகற்­றப்­பட வேண்­டும் என்­பது உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் விருப்­ப­மும்­கூட என திரு டெட்­ரோஸ் குறிப்­பிட்­டார்.

"கட்­டுப்­பா­டு­களை வேக­வே­க­மாக அகற்­று­வ­தால், கிரு­மித்­தொற்று மீண்­டும் ஆபத்­தான அள­வில் அதி­க­ரிக்­கக்­கூ­டும். நிலை­மை­யைச் சரி­யாக சமா­ளிக்­கா­விட்­டால் பின்­வி­ளை­வு­கள் மோச­மாக இருக்­கும்.

"கட்­டுப்­பா­டு­க­ளைப் படிப்­ப­டி­யா­க­வும் பாது­காப்­பா­க­வும் அகற்­றும் உத்­தி­கள் தொடர்­பில் பாதிக்­கப்­பட்ட நாடு­க­ளு­டன் உலக சுகா­தார நிறு­வ­னம் இணைந்து செயல்­பட்டு வரு­கிறது," என்று தெரி­வித்­தார் அவர். கட்­டுப்­பா­டு­களை அகற்­று­வ­தற்கு முன் ஆறு முக்­கிய அம்­சங்­க­ளைக் கருத்­தில் கொள்ள வேண்­டும் என்று திரு டெட்­ரோஸ் அறி­வு­றுத்­தி­னார்.

நாட்­டில் கிரு­மித்­தொற்று பர­வல் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்­டும்; மக்­க­ளுக்­குப் போது­மான பொது சுகா­தார சேவை­கள் கிடைக்க வேண்­டும்; பரா­ம­ரிப்பு இல்­லங்­களில் கிரு­மித்­தொற்று அபா­யம் குறைந்­த­பட்­சத்­தில் இருக்­க­வேண்­டும்; வேலை­யி­டங்­க­ளி­லும் பள்­ளி­க­ளி­லும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் நடப்­பில் இருக்க வேண்­டும்; வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரக்­கூ­டிய கிரு­மித்­தொற்று அபா­யம் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்­டும்; அத்­து­டன் கட்­டுப்­பா­டு­கள் அகற்­றப்­ப­டு­வ­தில் மக்­க­ளின் ஈடு­பாடு அவ­சி­ய­மென திரு டெட்­ரோஸ் சுட்­டி­னார்.