உல்லாசக் கப்பலில் பாதிக்கு மேற்பட்டோருக்கு கிருமித்தொற்று பாதிப்பு

உல்லாசக் கப்பலில் பாதிக்கு மேற்பட்டோருக்கு கிருமித்தொற்று பாதிப்பு

1 mins read
5a079284-894f-4585-9d87-00070d6aeeb1
கொவிட்-19 கிருமித்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு கப்பல் பயணி புதன்கிழமையன்று மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். படம்: ஏஎஃப்பி -

மோண்­டி­வி­டியோ: ஆஸ்­தி­ரே­லிய உல்­லா­சக் கப்­பல் ஒன்­றில் பய­ணம் செய்­த­வர்­களில் குறைந்­தது 60 விழுக்­காட்­ டி­னர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அர்­ஜண்­டினா, சிலி போன்ற அரு­கி­லுள்ள தென் அமெ­ரிக்க நாடு­கள் முடங்­கி­யி­ருப்­ப­தால் எல்­லை­கள் மூடப்­பட்ட நிலை­யில், உல்­லா­சக் கப்­பல் இரு வாரங்­க­ளாக எங்­கும் போக முடி­யா­மல் நடுக்­க­ட­லில் சிக்­கி­யி­ருந்­தது.

சென்ற மாதம் 27ஆம் தேதி­யி­லி­ருந்து நகர முடி­யா­மல் இருந்­ததை அடுத்து 'கரெக் மொர்­டி­மெர்' கப்­பல், உரு­கு­வெ­யில் உள்ள மோண்­டி­வி­டியோ துறை­மு­கத்தை நேற்று முன்­தி­னம் அடைந்­தது.

கொரோனா கிரு­மித்­தொற்று இல்­லா­தோர், சிறப்­பாக ஏற்­பாடு செய்­யப்­பட்ட விமா­னம் வழி நேற்று காலை ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்பர்ன் பகு­திக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

எஞ்­சிய 128 பய­ணி­கள் கிருமி பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்ள நிலை­யில் தொடர்ந்து உல்­லா­சக் கப்­ப­லில் தனி­மைப்­ப­டுத்­தப்­ ப­டு­வர் என்று உரு­கு­வெய் வெளி­யு­றவு அமைச்­சர் தெரி­வித்­தார்.

உரு­கு­வெய் மற்­றும் ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கங்­கள் செய்­து­கொண்ட ஒப்­பந்­தப்­படி, கப்­ப­லி­லி­ருந்து வெளி­யேற்­றப்­படும் பய­ணி­கள் சுகா­தா­ர­மான முறை­யில் அமைக்­கப்­பட்ட ஒரு பாதை­யில் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

வெளி­யேற்­றப்­பட்ட ஆஸ்­தி­ரே­லிய மற்­றும் நியூ­சி­லாந்து பய­ணி­களில் பெரும்­பா­லா­னோர் முதி­ய­வர்­கள் என்று கூறப்­பட்­டது.

உரு­கு­வெ­யில் இது­வரை 494 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களும் 7 உயி­ரி­ழப்­பு­களும் பதி­வா­கி­யுள்­ளன.