பெய்ஜிங் ஹோட்டல்களில் கிருமி சோதனை

பெய்ஜிங் ஹோட்டல்களில் கிருமி சோதனை

1 mins read
946a13b2-fc51-48af-9cd7-3f4e996517b5
இன்­று­மு­தல் வெளி­நாட்­டி­னர் பெய்­ஜிங் ஹோட்­டல்­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்கு முன் கொரோனா கிரு­மிக்­கான சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர்.  படம்: இபிஏ -

பெய்­ஜிங்: இன்­று­மு­தல் வெளி­நாட்­டி­னர் பெய்­ஜிங் ஹோட்­டல்­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்கு முன் கொரோனா கிரு­மிக்­கான சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர்.

கிரு­மித்­தொற்று இல்லை என்று உறு­தி­யான பிறகே ஹோட்­டல் அறை கொடுக்­கப்­படும் என்று நேற்று முன்­தி­னம் புதிய கிருமி தடுப்பு நட­வ­டிக்கை அறி­விக்­கப்­பட்­டது.

மக்­கள் கூட்­டத்­தைக் கட்­டுப் ­ப­டுத்­த­வும் சமா­ளிக்­க­வும் இந்த நட­வ­டிக்கை உத­வும் என்று கூறப்­பட்­டது.

சீனா­வில் நக­ரங்­கள் மற்­றும் பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் அகற்­றப்­பட்ட நிலை­யில் மீண்­டும் புதிய கொரோனா கிரு­மித்­தொற்று சம்­ ப­வங்­கள் அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யுள்­ளது அர­சாங்­கத்­திற்­குக் கவலை அளிக்­கும் ஒன்­றாக உள்­ளது. அத்­து­டன் கிரு­மி­யால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரில் பெரும்­பா­லா­னோர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து திரும்­பி­ய­வர்­கள்.

கொவிட்-19 கிருமி பர­வத் தொடங்­கி­ய­தாக கூறப்­படும் ஹுபெய் மாநி­லத்­தில் ஏழு நாட்­ க­ளுக்­குத் தொடர்ச்­சி­யாக எந்­த­வொரு புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வ­மும் பதி­வா­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.