கொரோனா: வடகொரியாவில் கட்டுப்பாடுகள் கடுமையாகும்

கொரோனா: வடகொரியாவில் கட்டுப்பாடுகள் கடுமையாகும்

2 mins read
bfd6b5bd-dc46-4abf-b440-71f55e4ae165
வட­கொ­ரி­யா­வில் கொரோனா கிருமித்தொற்­றி­லிருந்து மக்­க­ளைக் காக்க இன்னும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வர­வேண்­டும் என்று தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்டுள்­ளது.  படம்: ஏஎப்பி -

சோல்: வட­கொ­ரி­யா­வில் கொரோனா கிருமித்தொற்­றி­லிருந்து மக்­க­ளைக் காக்க இன்னும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வர­வேண்­டும் என்று தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்டுள்­ளது.

அந்த நாட்­டின் அதி­பர் கிம் ஜோங் உன் தலை­மை­யில் நடந்த ஆளும்­கட்­சி­யின் மத்­தி­யக் குழு அர­சி­யல் பிரிவு கூட்­டத்­தில் அத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

வட­கொ­ரி­யா­வில் கொரோனா கிருமி கார­ண­மாக பொரு­ளி­யல் பாதிப்பு ஏற்­பட்டு வரு­கிறது. இருந்­தா­லும் சூழ்­நி­லை­யைச் சீராக வைத்­தி­ருக்க கடு­மை­யான தலை­சி­றந்த அவ­ச­ர­கால முயற்­சி­களை எடுத்து கிரு­மித்­தொற்றை அர­சாங்­கம் சமா­ளித்து வரு­கிறது என்று அந்த நாட்­டின் மத்­திய செய்தி நிறு­வ­னம் தெரி­வித்து உள்­ளது.

வட­கொ­ரி­யா­வில் 500க்­கும் அதிகமான மக்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கி­றார்­கள். ஆனால் இது­வ­ரை­யில் யாருக்­கும் கொரோனா கிருமி தொற்றி இருப்­ப­தாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று உலக சுகா­தார நிறு­வ­னத்­திற்­கான வட­கொ­ரிய அதி­காரி தெரி­வித்­து உள்ளார்.

வட­கொ­ரி­யாவை ஆளும் கொரிய பட்­டா­ளிக் கட்­சி­யின் மத்தியக் குழு­வின் அர­சி­யல் பிரி­வுக் கூட்­டம் சனிக்­கி­ழமை நடந்­தது. அதில் கலந்­து­கொண்­ட அதி­ப­ரும் அதி­கா­ரி­களும் முகக்­க­வ­சங்­களை அணிந்­தி­ருக்­க­வில்லை. ஒரு மீட்­டர் விதி­யை­யும் அவர்­கள் பின்­பற்­றி­ய­தா­கத் தெரி­ய­வில்லை.

அந்­தக் கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட முடி­வு­கள் உச்ச ஆட்­சிக் குழு­வி­டம் தாக்­கல் செய்­யப்­பட்டு இருக்­கின்­றன. ஆனால் அந்த ஆட்­சிக் குழு எப்­போது கூடும் என்ன முடிவு எடுக்­கும் என்­பது பற்­றிய விவ­ரங்­கள் வெளி­யா­க­வில்லை.

இவ்­வே­ளை­யில், அதி­பரின் சகோ­த­ரி­யும் அர­சாங்க மூத்த அதி­கா­ரி­யு­மான கிம் யோ ஜோங் ஆளும் கட்­சி­யின் மத்­தி­யக் குழு­வின் அர­சி­யல் பிரி­வின் மாற்று உறுப்­பி­ன­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு இருக்­கி­றார் என்று அந்நாட்டுத் தகவல்கள் தெரி­வித்­தன.

இத­னி­டையே, பக்­கத்து நாடான தென்­கொ­ரி­யா­வில் சனிக்­கி­ழமை வரை 10,512 பேர் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மா­கப் பாதிக்­கப்­பட்டு இருந்­த­னர். 214 பேர் மாண்­டு­விட்­ட­னர்.