மலேசியா: முகக்கவச மோசடியில் $13,750 இழப்பு

மலேசியா: முகக்கவச மோசடியில் $13,750 இழப்பு

1 mins read
44faf89d-342d-4b51-87ab-8259deb6b398
மலே­சி­யா­வில் இணை­யத்­தில் முகக்­க­வ­சத்தை வாங்க முயன்ற இரு­வர் $13,750  (41,920 ரிங்­கிட்) இழந்­த­னர்.  -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் இணை­யத்­தில் முகக்­க­வ­சத்தை வாங்க முயன்ற இரு­வர் $13,750 (41,920 ரிங்­கிட்) இழந்­த­னர்.

ஒரு மோசடி கும்­பல் அந்த இரு­வ­ரை­யும் ஏமாற்­றி­விட்­ட­தாக பினாங்கு மாநி­லத்­தின் செப­ராங் பிராய் உத்­தரா மாவட்ட பொறுப்பு அதி­கா­ரி­யான உதவி ஆணை­யர் முகம்­மது நூர் தெரி­வித்­தார்.

ஃபேஸ்புக் பக்­கத்­தில் வெளி­யான விளம்­ப­ரத்­தைப் பார்த்து அந்த இரு­வ­ரும் மோசடி பேர்­வ­ழி­க­ளி­டம் சிக்­கி­விட்­டார்­கள்.

இத­னி­டையே, மலே­சி­யா­வில் நேற்­று­வரை 4,683 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு இருந்­த­னர். 76 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். 2,108 பேர் குண­ம­டைந்­த­னர் என்று சுகா­தார அமைச்சு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.