சில நிறுவனங்களுக்கு அனுமதி

சில நிறுவனங்களுக்கு அனுமதி

1 mins read
81e98f92-91ab-46a5-b297-543a7dd2e23a
கிருமித்தொற்றால் பலியான சக ஊழியரை நினைத்துக் கலங்கும் மட்ரிட் நகர மருத்துவமனை ஒன்றின் ஊழியர்கள். படம்: ஏஎஃப்பி -

மட்­ரிட்: முடக்க நட­வ­டிக்­கைக்­கான சில கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வ­தன் கீழ் வேலைக்­குத் திரும்­பும் மக்­க­ளுக்கு ஸ்பெ­யி­ன் அர­சாங்­கம் புதிய வழி­காட்­டு­தல்­களை வகுத்­துள்­ளது.

கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில், அத்­தி­யா­வ­சிய மற்­றும் முக்­கிய வர்த்­த­கங்­க­ளைத் தவிர மார்ச் மாத நடுப்­ப­கு­தி­யில் இருந்து ஸ்பெ­யின் முடக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கிடையே, மார்ச் 23ஆம் தேதிக்­குப் பிறகு உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை ஸ்பெ­யி­னில் படிப்­ப­டி­யாகக் குறைந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வேலைக்­குத் திரும்­பும் வகை­யில், இன்று முதல் கட்­டு­மா­னம் மற்­றும் உற்­பத்தி போன்ற வேறு சில தொழில்­கள் மீண்­டும் செயல்­ப­டு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக பிர­த­மர் அலு­வ­ல­கம் வெளி­யிட்­டுள்ள வழி­காட்­டு­தல்­களில், மீண்­டும் செயல்­ப­ட­வுள்ள நிறு­வ­னங்­கள் தங்­கள் ஊழி­யர்­க­ளுக்­குக் கட்­டா­யம் பாது­காப்பு கவ­சங்­கள் அளிக்க வேண்­டும் என்­றும் ஊழி­யர்­க­ளுக்கு இடையே குறைந்­தது இரண்டு மீட்­டர் இடை­வெளி இருப்­பதை உறுதி செய்ய வேண்­டும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

முடக்க நட­வ­டிக்­கையை வெகு முன்­ன­தா­கவே தளர்த்­தப்­ப­டு­வ­தாக எழுந்­துள்ள கவ­லை­க­ளுக்கு மத்­தி­யில், உள்­துறை அமைச்­சர் பெர்­னாண்டோ கிராண்டே-மார்­லாஸ்கா சில தொழில்கள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தவிர, முடக்க நட­வ­டிக்­கை­யில் எந்­தத் தளர்­வு­களும் கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை என்­றார்.

பொது போக்­கு­வ­ரத்து சந்­திப்­பு­களில் பாது­காப்பு படை­யி­னர் 10 மில்­லி­யன் முகக்­க­வ­சங்­களை வழங்­கு­வர் என்­றும் அவர் சொன்­னார்.

ஸ்பெ­யி­னில் இது­வரை 16,353 பேர் மாண்­ட­னர். 161,852 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவர்­களில் மருத்­து­வர்­கள் உட்­பட சுகா­தா­ரத் துறை­யி­னர் என 25,000 பேரும் இதில் அடங்­கு­வர்.