'தாக்குதல் நடத்தியவர்களை மன்னித்துவிட்டோம்'

'தாக்குதல் நடத்தியவர்களை மன்னித்துவிட்டோம்'

1 mins read
bab513f6-fd97-41b2-b6ce-091816038872
கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இலங்கையில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்கள் வீடுகளிலேயே ஈஸ்டர் தின பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். படம்: இபிஏ -

கொழும்பு: இலங்­கை­யில் கடந்­தாண்டு ஈஸ்­டர் தினத்­தில் 279 பேரைக் கொன்ற பயங்கரவாத தாக்­கு­த­லில் ஈடு­பட்ட தற்­கொலை படை­யிரை மன்­னித்து விட்­ட­தாக இலங்கை ரோமன் கத்­தோ­லிக்க தேவா­ல­யம் கூறி­யுள்­ளது.

கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஈஸ்­டர் தின நிகழ்­வு­கள் ரத்து செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யில், பேரா­யர் மால்­கம் ரஞ்­சித்­தின் ஈஸ்­டர் தின திருப்­பலி தொலைக்­காட்­சி­யில் ஒளி­ப­ரப்­பப்­பட்­டது.

அப்­போது கடந்­தாண்டு ஈஸ்­டர் தினத்­தில் நடந்த தாக்­கு­தலை நினை­வு­கூர்ந்த அவர், "நம்மை அழிக்க நினைத்த, எதி­ரி­க­ளுக்கு நாம் அன்­பைக் கொடுப்­போம். அவர்­களை மன்­னித்தோம்," என்­றார்.

கடந்­தாண்டு மூன்று தேவா­ல­யங்­கள், மூன்று சொகுசு தங்கு விடு­தி­கள் ஆகி­ய­வற்­றில் தற்­கொலை படை­யி­னர் நடத்­திய தாக்­கு­த­லில் 279 பேர் மாண்­ட­னர். 600 பேர் காய­ம­டைந்­த­னர்.

இதை முத­லில் பயங்கரவாத தாக்­கு­தல் என்ற அப்­போ­தைய அதி­பர் மைத்­ரி­பால சிறி­சேன, பின்­னர் போதைப்­பொ­ருள் கடத்­தல்­கா­ரர்­க­ளின் கைவ­ரிசை இது என்­றார்.

தாக்­கு­தல் நடந்த இரண்டு தேவா­ல­யங்­களில் கத­வு­கள் மூடப்­பட்ட நிலை­யில், ஈஸ்­டர் நிகழ்­வு­கள் நடந்தன. இதற்­கி­டையே, இலங்­கை­யில் சுமார் 200 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர், ஏழு பேர் மாண்­டுள்ளனர்.