அதிகரிக்கும் மறுதொற்று; அச்சத்தில் தென்கொரியா

1 mins read
52a2b986-1030-4060-8e0c-e9c5342e56a6
-

சோல்: கிருமித் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் தொற்றுக்கு ஆளாவதால் தென் கொரியாவில் அச்சம் நிலவுகிறது.

கடந்த வாரம் 51 பேருக்கு மீண்டும் தொற்று இருப்பதாகக் கூறிய தென்கொரியா நேற்று மேலும் 116 பேருக்கு மீண்டும் தொற்று இருப்பது பரிசோதனை

யில் தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளது.இதனால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தளர்த்துவது குறித்த பரிசீலனை கேள்விக் குறியாகியுள்ளது.

பரிசோதனை முறையில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தனவா சோதனை கருவிகள் சரியாக வேலை செய்தனவா என் பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அரசாங்க வழிகாட்டுதல்களின்படி கட்டுப் பாட்டு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு தென்கொரிய அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.