அமெரிக்காவிற்கு தென் கொரிய சோதனை கருவிகள்

அமெரிக்காவிற்கு தென் கொரிய சோதனை கருவிகள்

1 mins read
d000a0af-ab47-4c4f-bf38-6d536847fcc9
கிரு­மித் தொற்­றால் அமெ­ரிக்­கா­வில் நேர்ந்­துள்ள உயி­ரி­ழப்­பு­களில் ஆப்­பி­ரிக்க அமெ­ரிக்­கர்­கள் அதி­கம்  பேர் பலி­யா­ன­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். படம்: ராய்ட்டர்ஸ் -

சோல்: அமெ­ரிக்­கா­விற்கு 600,000 கிரு­மித்தொற்று சோதனைக் கரு­வி­களை அனுப்ப தென்­கொ­ரியா திட்­ட­மிட்­டுள்­ள­தாக சோல் அதி­காரி ஒரு­வர் சொன்­னார்.

கிரு­மித்தொற்­றால் கடும் உயிர்ச்சேதங்­களை எதிர்­கொண்டு வரு­கிறது அமெ­ரிக்கா. இந்­நி­லை­யில், கடந்த மாதம் 25ஆம் தேதி தென்­கொ­ரிய அதி­பர் மூன் ஜே-இன்­னைத் தொலை­பே­சி­யில் தொடர்பு கொண்ட அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப், கொரோனா பரி­சோ­தனைக் கரு­வி­களை அனுப்­பும்­படி கேட்­டுக் கொண்­டார்.

இதை­ய­டுத்து, செவ்­வாய்க்­கி­ழமை இரவு 10.30 மணிக்கு அமெ­ரிக்க ஃபெடரல் அவ­ச­ர­கால சரக்கு விமா­னத்­தில் இக்­க­ரு­வி­கள் அனுப்­பப்­ப­ட­வுள்­ள­தாகப் பெயர் தெரி­விக்க விரும்­பாத அதி­காரி ஒரு­வர் கூறி­னார்.

இந்த முதற்­கட்ட ஏற்­று­ம­திக்­குப் பிறகு மேலும் 150,000 கரு­வி­கள் உள்­ளூர் சில்­லறை விற்­ப­னை­யா­ளர் மூலம் அமெ­ரிக்­கா­விற்கு விற்­கப்­படும் என்­றும் அந்த அதி­காரி தெரி­வித்­தார்.

இதற்கு முன் லாஸ் ஏஞ்­சலிஸ் நக­ருக்கு தென்­கொ­ரியா ஏற்­று­மதி செய்­துள்­ளது. ஆனால் இது அமெ­ரிக்க அர­சாங்­கத்­தி­டம் இருந்து தென்­கொ­ரி­யா­விற்­குக் கிடைத்­துள்ள நேரடி ஏற்­று­மதி வாய்ப்­பா­கும்.