மது விருந்தில் 9 பேர் கைது

மது விருந்தில் 9 பேர் கைது

1 mins read
d849c8e6-d3d3-4d73-aaf4-8cc8ef12ea53
மலேசியாவின் தீயணைப்புப் படை வீரர்கள் கொவிட்-19 பரவலைத் தடுக்க கிருமி நாசினி மருந்தை தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ் -

ஜார்ஜ் டவுன்: மலே­சி­யா­வில் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் நடை­மு­றை­யில் இருக்­கும்­போது, கரோக்கே கடை­யில் ஒன்று கூடி­ய­வர்­களை மலே­சிய போலி­சார் கைது செய்­த­னர்.

பினாங்­கின் ஜார்ஜ் டவுன் நக­ரில் உள்ள ஜாலான் பர்­மா­வில் உள்ள ஒரு கரோக்கே கடை­யில் மது விருந்தை நடத்­தி­ய­தற்­காக ஏழு மலே­சிய ஆண்­கள் மற்­றும் இரண்டு இந்­தோ­னீ­சிய பெண்­கள் பிடி­பட்­ட­னர்.

கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் அத்­தி­யா­வ­சிய தேவை­கள் தவிர மக்­கள் வெளியே செல்ல அனு­ம­தி­யில்லை.

ரக­சிய பிரிவு போலி­சார் நடத்­திய அதி­ரடி சோத­னை­யில், அக்­க­டை­யின் உரி­மை­யா­ளர் உட்­பட 9 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக ஜார்ஜ் டவுன் மாவட்ட போலிஸ் அதி­காரி சோபி­யன் சாண்­டோங் கூறி­னார். ஆறு ஆட­வர்­கள் போதைப் பொருள் உட்­கொண்­டி­ருந்­த­து சோத­னை­யில் தெரிய வந்­த­தா­க­வும் அவர் சொன்­னார்.