சிங்கப்பூர்: எண்ணெய் வளமிக்க நாடுகள் நேற்று உற்பத்தியை குறைக்க முடிவு செய்ததால் கச்சா எண்ணெய்யின் விலை திடீரென அதிகரித்தது. இதனால் படுவீழ்ச்சியில் உள்ள சந்தைகள் மீளும் என எதிர்பார்க்கப்பட்டது.
எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் அறிவிப்பு வெளி யானதும் மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு திறக்கப்பட்ட லண்டன் பங்குச் சந்தையிலும் இது எதி ரொலித்தது.
பங்குகள் எட்டு விழுக்காடு ஏற்றம் கண்டன. ஆனால் அதே வேகத்தில் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. 'ஓபெக்' எனும் எண்ெணய் ஏற்றுமதி செய்யும் நாடுகளும் அதன் கூட்டணி நாடுகளும் மே மாதத்தி லிருந்து நாள் ஒன்றுக்கு 9.7 மில்லியன் பீப்பாய் அளவுக்கு எண்ெணய் உற்பத்தியைக் குறைக்க திட்டமிட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு நாடு களுக்கு இடையே இந்த இணக்கம் ஏற்பட்டது.
பிப்ரவரி மாதம் மத்தியில் உலகின் பெரிய பொருளியல் நாடுகள் கிருமிக்கு எதிரான போராட்டத்தில் நாட்டை முடக்கும் நடவடிக்கைகளை எடுத்தன. இதையடுத்து கச்சா எண்ணெய் விலை சரிவை நோக்கிச் சென்றது.
ஆனால் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் முடிவு போது மான அளவு இல்லை என்று பல முன்னணி நிறுவனங்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளன.
"எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள இணக்கம் எதிர்பார்க்கப்பட்டதைபோல இல்லை," என்று ஹுஸ்டனில் உள்ள லிபோவ் எண்ணெய் சங்கத்தின் தலைவர் ஆன்டி லிபோவ் கூறினார்.
கோல்ட்மேன் சேக், "இந்த இணக்கம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. ஆனால் போதாது," என்று கூறியது. மெக்சிகோ தனியாக 100,000 பீப்பாய் கச்சா எண்ெணய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்து உள்ளது. முன்னதாக தேவைக்கு அதிகமாக உள்ள எண்ணெய் விநியோகத்தை சரி செய்யாவிட்டால் வரி அதிகரிப்பு அல்லது இதர நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக ஓபெக்குக்கு தலைமை தாங்கும் சவூதி அரேபி யாவை டிரம்ப் எச்சரித்திருந்தார்.

