நியூயார்க்: உலகம் முழுவதும் கொேரானா கிருமிக்கு எதிராக தடுப்பூசிகளைத் தயாரிக்கும் முயற்சியில் எழுபது நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது.
ஹாங்காங்கில் பட்டியலிடப் பட்ட கேன்சினோ பயோலாஜிக்ஸ் தயாரித்துள்ள மருந்துகள் பரிசோதிக்கப்படுகின்றன.
பெய்ஜிங் பயோடெக்னாலஜி இன்ஸ்டிடியூட் இரண்டாம் கட்டத்தை நெருங்கியுள்ளது.
யுஎஸ் மருந்து தயாரிக்கும் நிறுவனமான மாடெர்னா அண்ட் இனோவியோ நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி மருந்துகள் தற்போது மனிதர்களிடையே பரிசோதிக்கப்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆவணம் தெரிவித்தது.
ஃபைசர், சனோஃபி போன்ற பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் கொேரானா கிருமி தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

