சிங்கப்பூர்-ஹாங்காங் ஓர் ஒப்பீடு

சிங்கப்பூர்-ஹாங்காங் ஓர் ஒப்பீடு

1 mins read
7a9657b3-14ed-4b0b-ba90-2fe7aabe2281
ஹாங்காங்கின் சியூங் சாவ் தீவில் முகக் கவசம் அணிந்தவாறு செல்லும் மக்கள். கொவிட்-19 கிரு­மித்­தொற்று வேக­மா­கப் பர­வா­தி­ருக்க மேற்­கொள்­ளப்­பட்ட தீவிர நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சிங்­கப்­பூ­ரைப் போலவே ஹாங்­காங்­கும் பாராட்­டைப் பெற்று வரு­கிறது.  படம்: ராய்ட்டர்ஸ் -

ஹாங்­காங்: கொவிட்-19 கிரு­மித்­தொற்று வேக­மா­கப் பர­வா­தி­ருக்க மேற்­கொள்­ளப்­பட்ட தீவிர நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சிங்­கப்­பூ­ரைப் போலவே ஹாங்­காங்­கும் பாராட்­டைப் பெற்று வரு­கிறது.

குறிப்­பாக, நேற்று முன்­தி­னம் ஹாங்­காங்­கில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை இரண்­டா­வது முறை­யாக ஒற்றை இலக்­கத்­தில் இருந்­தது. அன்று பதி­வான எண்­ணிக்கை ஐந்து மட்­டுமே. மார்ச் 15ஆம் தேதி 149 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வான ஹாங்­காங்­கில் அந்த எண்­ணிக்கை நேற்று முன்­தி­னம் 1005ஐ தொட்­டுள்­ளது. அதே­போல மார்ச் 15ஆம் தேதி 226 சம்­ப­வங்­கள் மட்­டுமே பதி­வான சிங்­கப்­பூ­ரில் திங்­கட்­கி­ழமை நில­வ­ரப்­படி 2,532 பேர் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர்.

2003ஆம் ஆண்­டின் சார்ஸ் நோய் பர­வ­லில் கற்­றுக்­கொண்ட பாடம் இரு நாடு­க­ளுக்­கும் கைகொ­டுத்­தி­ருப்­ப­தாக நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர். அத­னால்­தான், சீனா உள்­ளிட்ட பல நாடு­க­ளைப்­போல நக­ரத்தை முற்­றாக முடக்­கா­ம­லேயே கிரு­மிப் பர­வல் நட­வ­டிக்­கை­களை சிங்­கப்­பூ­ரும் ஹாங்­காங்­கும் செயல்­ ப­டுத்தி வரு­வ­தாக அவர்கள் குறிப்­பி­டு­கின்­ற­னர். ஹாங் காங் வெற்றி சிங்கப்பூருக்கும் கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.