நியூ­யார்க் ஆளு­நர் ஆண்ட்ரூ: மோசமான நிலையைக் கடந்துவிட்டோம்

நியூ­யார்க்: கிரு­மித்தொற்­றால் அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரில் பலி­யா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்­துள்ள நிலை­யில், மோச­மான காலம் முடிந்­து­விட்­டது என்று கூறி­யுள்­ளார் நியூ­யார்க் ஆளு­நர் ஆண்ட்ரூ கியோமோ.

நியூ­யார்க்­கில் நேற்று முன்­தி­னம் பலி­யா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை 671 ஆகும். கடந்த ஏப்­ரல் 5ஆம் தேதிக்­குப் பிறகு ஆகக் குறை­வான எண்­ணிக்­கை­யா­கும் இது.

இந்­நி­லை­யில் பேசிய கியோமோ, மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் சரா­சரி குறைந்து வரு­வது மற்­றும் தொற்றுநோய்க்­கான வளைவு தட்­டை­யாகி வரு­வ­தா­க­வும் சொன்னார். எனவே பொரு­ளி­யலை படிப்­ப­டி­யாக மீண்­டும் தொடங்க தாம் திட்­ட­மிட்டு வரு­வ­தா­க­க் கூறினார்.

ஆனால் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் முன்­ன­தா­கவே வில­கிக் கொள்­ளப்­பட்­டு­விட்­டால், கிரு­மித் தொற்­றால் மீண்­டும் நிலைமை மோச­மா­கக்­கூ­டும் என்­றும் சொன்­னார்.

மேலும் வீட்­டில் தங்­கும் உத்­த­ர­வைக் கூட்­டாகத் தளர்த்­து­வது தொடர்­பில், அண்டை மாநி­லங்­க­ளான நியூ­ஜெர்சி, கனெக்­டி­கட், டெலா­வேர், பென்­சில்­வே­னியா, ரோட் தீவு உள்­ளிட்ட மாநி­லங்­க­ளு­டன் நியூ­யார்க் நெருக்­க­மாக பணி­யாற்­றும் என்­றார் கியோமோ.

இதை­ய­டுத்து, 10 மாநி­லங்­களில் படிப்­ப­டி­யாக பொரு­ளி­யலை மீண்­டும் தொடங்­கு­வ­தற்­கான ஒருங்­கி­ணைந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது.

இதற்­கி­டையே, அமெ­ரிக்கப் பொரு­ளி­யலை மீண்­டும் திறப்­ப­தற்­கும் சமூக இடை­வெளி விதி­யைத் தளர்த்த மாநி­லங்­க­ளுக்கு உத்­த­ர­விடவும் தனக்கு ‘முழு’ அதி­கா­ரம் இருப்­ப­தாக அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக ஆளு­நர்­க­ளுக்குத் தனது நிர்­வா­கம் சில நாட்­களில் வழி­காட்­டு­தலை வெளி­யி­டும் என்­றும் அவர் கூறி­னார்.

தனது உத்­த­ரவை ஏற்க மறுக்­கும் ஆளு­நர்­கள் அர­சி­யல் விளை­வு­களை எதிர்­கொள்ள நேரி­டும் என்­றும் அவர் எச்­ச­ரித்­தார்.

ஆனால் டிரம்­பின் கூற்றை சட்ட வல்­லு­நர்­களும் சில ஆளு­நர்­களும் மறுத்­த­னர். அர­சி­ய­ல­மைப்­பின் 10வது திருத்­தம் மத்­திய அர­சுக்கு வழங்­கப்­ப­டாத அதி­கா­ரங்­க­ளை, மாநி­லங்­க­ளுக்கு வழங்குகிறது என்கின்றனர் அவர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!