மலேசியாவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை விற்க இந்தியா ஒப்புதல்

மலேசியாவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை விற்க இந்தியா ஒப்புதல்

2 mins read
60b51624-9be9-4812-af64-7f69c8e1a9a4
மலேசியாவுக்கு 89,100 ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை விற்க செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக திரு ஜாஃபர் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். மலேசியா ஒரு மில்லியன் மாத்திரைகள் வேண்டுமென்று இந்தியாவிடம் கோரிக்கை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

கொவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை மலேசியாவுக்கு விற்பனை செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசியாவின் துணை வெளியுறவு அமைச்சர் கமாருதீன் ஜாஃபர் இன்று (ஏப்ரல் 15) தெரிவித்துள்ளார்.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை உலகிலேயே அதிக அளவில் தயாரிக்கும் நாடு இந்தியா. மலேரியாவுக்கு எதிரான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் அந்த மருந்து கொவிட்-19 சிகிச்சையிலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மாத்திரைக்கு உலக அளவில் தட்டுப்பாடு நிலவுகிறது. சொந்த நாட்டில் பயன்படுத்த வேண்டியிருப்பதால், இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்த இந்தியா, அண்மையில் அமெரிக்காவுக்கு இந்த மாத்திரைகளை மனிதாபிமான அடிப்படையில் வழங்குவதாகத் தெரிவித்திருந்தது.

மலேசியாவுக்கு 89,100 ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை விற்க செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக திரு ஜாஃபர் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

இருப்பு இருந்தால் அந்த மாத்திரைகளை இன்னும் அதிகமாக வாங்க முயற்சி செய்வோம் என்றும் அவர் கூறினார்.

ஆனால், இது குறித்த ராட்டர்சின் கேள்விக்கு இந்தியா உடனடியாக பதிலேதும் அளிக்கவில்லை.

மலேசியா ஒரு மில்லியன் மாத்திரைகள் வேண்டுமென்று இந்தியாவிடம் கோரிக்கை வைத்திருந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அதிகாரிகள் இருவர் குறிப்பிட்டனர்.

சுமார் 5,000 கொவிட்-19 நோயாளிகளைக் கொண்டிருக்கும் மலேசியாவில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தொடர்ந்து இந்தியாவின் கொள்கைகள் சிலவற்றைப் பற்றி விமர்சித்ததன் தொடர்பில் இந்தியாவுக்கும் மலேசியாவுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்நிலையில், மலேசியாவுக்கு இந்தியா மத்திரைகளை ஏற்றுமதி செய்வது, அவ்விரு நாடுகளின் உறவில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் டேவா ஃபார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஐபிசிஏ லேபராடரீஸ், காடில்லா ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை உற்பத்தி செய்கின்றன.

காடில்லா நிறுவனம் தனது உற்பத்தியை 10 மடங்கு அதிகரித்து மாதத்துக்கு 30 மெட்ரிக் டன் மாத்திரைகளை உற்பத்தி செய்கிறது; தேவை ஏற்பட்டால் இன்னும் அதிகமாக தயாரிக்கவும் அது தயாராக உள்ளது எனா அதன் நிர்வாக இயக்குநர் ஷர்வில் பட்டேல் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களிடம் கடந்த வாரம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்