கொவிட்-19 ஒழிய இந்தியா உதவி: மலேசியாவுக்கு மலேரியா மருந்து

2 mins read
01bb8462-35c6-4976-b379-7ec0ae735304
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கொரோனா கிருமி அதிகம் பாதித்துள்ள ஒரு பகுதிக்குள் செல்ல சுகாதார ஊழியர் ஒருவர் பாதுகாப்பு உடையுடன் ஆயத்தமாகிறார். படம்: இபிஏ -

கோலா­லம்­பூர்: மலே­சியாவில் கொரோனா கிருமி சிகிச்­சை­யில் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக அந்த நாட்­டுக்கு மலே­ரியா மாத்­தி­ரை­களை அனுப்ப இந்­தியா இணங்கி இருக்­கிறது. ஹைட்­ராக்­சி­கு­ளோ­ரோ­கு­யின் என்ற அந்த மாத்­திரை உற்­பத்­தி­யில் இந்­தியா உல­கில் முத­லி­டம் வகிக்­கிறது.

கொவிட்-19 எனப்­படும் கொரோனா கிரு­மித்­தொற்று நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளிப்­ப­தில் அந்த மாத்­திரை நல்ல பலன் தரு­வதாகக் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் உல­கம் முழு­வ­தும் அந்த மாத்­தி­ரைக்குப் பெரும் தேவை ஏற்­பட்டு இருக்­கிறது. அமெ­ரிக்க அதி­பர்கூட மாத்­தி­ரை­களை அனுப்­புமாறு இந்தி­யா­வி­டம் கேட்­டி­ருந்­தார்.

மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் கொரோனா கிரு­மித்­தொற்று நாடு­ க­ளுக்கு மலே­ரியா மாத்­தி­ரை­களை விற்­ப­தற்கு இம்­மா­தம் புது­டெல்லி இணங்­கி­யது.

இந்த நிலை­யில், மலே­சி­யா­வுக்­கும் அந்த மாத்­தி­ரையை விற்க இந்­தியா இணங்கி இருப்­ப­தாக மலே­சி­யா­வின் துணை வெளி­யு­றவு அமைச்­சர் கமா­ரு­தின் ஜாஃபர் கூறி­னார் என்று ராய்ட்­டர்ஸ் நிறு­வ­னம் நேற்று தெரி­வித்­தது.

மலே­சி­யா­வுக்கு 89,100 மாத்­தி­ரை­களை ஏற்­று­மதி செய்ய ஏப்­ரல் 14ஆம் தேதி இந்­தியா அனு­ம­தித்­த­தாக அவர் கூறி­னார்.

தனக்கு ஒரு மில்­லி­ய­னுக்­கும் அதிக மாத்­திரை தேவை என்று இந்­தி­யா­வி­டம் மலே­சியா கேட்டு இருப்­ப­தாக மலே­சி­யா­வைச் சேர்ந்த இரண்டு தக­வல் வட்­டா­ரங்­கள் கூறி­ய­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

இத­னி­டையே, மலே­சி­யா­வில் புதி­தாக 85 பேரைக் கிருமி தொற்­றி­யது என்­றும் மார்ச் மாதம் 18ஆம் தேதி கட்­டுப்­பா­டு­கள் அம­லா­ன­தற்­குப் பிறகு இதுவே ஆகக் குறைந்த அளவு என்­றும் சுகா­தார அமைச்சு நேற்று கூறி­யது.

புதி­தாக ஒரு­வர் மாண்­ட­தா­க­வும் இதை­யும் சேர்த்து பலி எண்­ணிக்கை 83 ஆன­தா­க­வும் அமைச்சு தெரி­வித்தது.