18 மாதங்களில் கொவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிக்கப்படலாம்

18 மாதங்களில் கொவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிக்கப்படலாம்

2 mins read
3fb4c699-2bd2-445d-a91b-6fe116fe7e59
பராகுவேயில் காய்ச்சல் வராமல் இருப்பதற்கான தடுபபூசி போடவந்த முதியவர் ஒருவருக்கு உடல்நிலையைச் சரிபார்க்கிறார் சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர். படம்: ஏஎப்பி -

வாஷிங்­டன்: உல­கம் முழு­வ­தும் பரவி உயி­ருக்கு அச்­சு­றுத்­த­லாக விளங்­கும் கொரோனா கிரு­மிக்கு தடுப்­பூ­சி­யைக் கண்­டு­பி­டிக்­கும் முயற்­சி­கள் தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றன.

கிருமி உரு­வான சீனா­வின் வூஹான் நக­ரம் முதல் அமெ­ரிக்கா வரை பல்­வேறு நாடு­களில் உள்ள ஆய்­வா­ளர்­கள் இணக்­கத்­து­டன் செயல்­பட்டு தடுப்­பூசி ஆய்­வில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் 12 முதல் 18 மாதங்­களில் புதிய தடுப்­பூசி கண்டு­ பி­டிக்­கப்­ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப் படு­கிறது.

இம்­மா­தம் 8ஆம் தேதி 'ஜர்­னல் நேச்­சுர்' என்ற இணை­யத்தளத்­தில் பதி­வேற்­றப்­பட்ட ஒரு கட்­டுரை, உல­கம் முழு­வ­தும் 115 தடுப்­பூசி ஆய்­வு­கள் நடை­பெற்று வரு­வ ­தாகத் தெரி­விக்­கிறது. இவற்­றில் 78 ஆய்­வு­கள் வெளிப்­ப­டை­யாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்த நிலை­யில் ஆய்­வு­கள் வெற்றி பெற்று 12 அல்­லது 18 மாதங்­க­ளுக்­குள் தடுப்­பூசி தயாராகி­ வி­டும் என கூறப்­ப­டு­கிறது.

பொது­வாக தடுப்­பூசி கண்­டு­பி­டிக்க பத்து முதல் 15 ஆண்­டு­கள் தேவைப் படலாம்.

இபோலா தொற்று நோய் (ஐந்து ஆண்­டு­கள்), பொன்­னுக்கு வீங்கி (நான்கு ஆண்­டு­கள்) போன்ற ஒரு சில சம்­ப­வங்­களுக்கு மட்­டும் ஐந்து ஆண்­டு­க­ளுக்­குள் தடுப்­பூசி கண்டு ­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. எச்­ஐவி கிருமி போன்­ற­வற்றுக்கு இன்­ன­மும் தடுப்­பூசி வெற்றி பெற­வில்லை.

"அறி­வி­யலை அறி­வி­ய­லா­கத்­தான் பார்க்க வேண்­டும், நடை­மு­றை­யில் விரை­வாக கண்­டு­பி­டிக்க முடி­வது சாத்­தி­யமா என்­ப­தை­யும் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும்," என்று தடுப்­பூசி தயா­ரிக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்ள பேயர் கல்­லூ­ரி­யின் தேசிய வெப்­ப­மண்­டல மருத்­துவ நிலை­யத்­தின் இணை முதல்­வர் டாக்­டர் மரியா எலினா போட்­டாஸி கூறி­னார். இரண்டு சம்­ப­வங்­களைத் தவிர மற்ற எந்த நோய்க்­கும் தடுப்­பூசி அவ்­வ­ளவு விரை­வாக கண்­டு­பி­டிக்­கப்பட­வில்லை என்று கூறிய அவர், "தற்­ச­ம­யம் கொரோனா கிரு­மிக்கு எதி­ராக 12 முதல் 18 மாதங்­களில் தடுப்­பூசி கண்­டு­பி­டிக்கப்படும் வாய்ப்பு உள்­ளது," என்­றார்.