கொவிட்-19 அச்சுறுத்தல்களுக்கு இடையே தென்கொரியாவில் தேர்தல்

1 mins read
35f042a5-1ae2-486f-9c21-92444b760b8b
சோல் நகர வாக்குச்சாவடிக்கு கையுறை, முகக்கவசம் அணிந்து வந்த வாக்காளர்கள். படம்: ஏஎஃப்பி -

சோல்: கொரோனா தொற்று சூழ்ந்து உள்ள உல­கில் பொதுத்­தேர்­தலை நடத்­தும் நாடு­களில் ஒன்­றான தென்­கொ­ரி­யா­வில் கிரு­மித்­ தொற்­றுக்கு இடை­யி­லும் நேற்று நாடா­ளு­மன்ற பொதுத்­தேர்­தல் தொடங்­கி­யது.

நாடு முழு­வ­தும் சுமார் 14,000 வாக்­குச் சாவ­டி­கள் அமைக்­கப்­பட்டு மக்­கள் ­காலை 6 மணிக்கே வாக்கு அளிக்­கத் தொடங்­கி­னர்.

பிற்பகலுக்கு முன்பு 44 மில்­லி­யன் பேரில் 27 விழுக்காட்டினர் அளித்து­விட்­ட­னர்.

வாக்­கா­ளர்­கள் முகக்­க­வ­சம் அணிந்து வர­வேண்­டும். கை உறை அணிந்­தி­ருக்­க­வேண்­டும். கை கழு­வும் திர­வத்­தால் கையைச் சுத்­த­மாக கழுவி இருக்­க­வேண்­டும். ஒரு மீட்­டர் இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­க­வேண்­டும் என்று நிபந்­த­னை­கள் விதிக்­கப்­பட்­டன.

உடல் வெப்­ப­நிலை சோதனை நடத்­தப்­படுகிறது. உடல் அதிக வெப்­ப­மாக இருந்­த­வர்­கள் சிறப்பு சாவ­டிக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.

தென்கொரி­யா­வில் கிரு­மித் தொற்­றுக்கு 11,000 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மேலும் 225 பேர் கிருமிக்கு பலியாகிவிட்டனர்.