வாஷிங்டன்: உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதால் சீனா கொதிப்படைந்துள்ளது. அமெரிக்காவின் முடிவு கவலையளிப்பதாகக் கூறியுள்ள சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஷாவ் லிஜியான், அமெரிக்கா தனது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். "அமெரிக்காவின் முடிவு அனைத்துலக ஒத்துழைப்பை பாதிக்கும். உலக நாடுகளின் பொது சுகாதாரத்திலும் உலக அளவில் நோய் பரவலைத் தடுப்பதிலும் முக்கிய பங்காற்றும் உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனா எப்போதும் துணை நிற்கும்," என்று அவர் சொன்னார்.
சீனா: நாங்கள் ஆதரவு வழங்குவோம்
1 mins read

