பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் குறைகூறுகிறார்

பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் குறைகூறுகிறார்

1 mins read

லண்டன்: கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதில் பிரிட்டன் ஆரம்பத்தில் மெதுவாக செயல்பட்டது என்றும் மற்ற நாடுகளிலிருந்து உடனடியாக அது பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் கியர் ஸ்டார்மர் குறை கூறியுள்ளார். இதற்கிடையே பராமரிப்பு இல்லங்களில் கொவிட்-19 தொற்று அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் முறையாக பரிசோதனை நடத்தப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதற்காக சோதனைச் சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் மேட் ஹான்காக் சொன்னார்.