பினாங்கினஞ்சாலான் பங்கோர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பிறந்தாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த 13 இளையர்களை மலேசிய போலிசார் கைது செய்தனர்.
நேற்று அதிகாலை 12.30 மணியளவில் போலிசார் சோதனை செய்தபோது, 19 முதல் 26 வயதுக்குட்பட்ட அந்த இளையர்கள் மது அருந்திக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் இவ்வேளையில் இவ்வளவு பேர் மொத்தமாகக் கூடியிருந்ததால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டனர்.
அவர்கள் மீது தொற்று நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு விதிமுறைகள் 2020, குற்றவியல் தண்டனைச் சட்டம் 269 ஆகியவற்றின்கீழ் குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மலேசியாவில் இன்று புதிதாக 110 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது; அங்கு கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,182 ஆகியுள்ளது.
இன்று புதிதாக 119 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை மொத்த 2,766 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 2,332 பேரில் 56 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்; அவர்களில் 29 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
அங்கு மேலும் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு 84 ஆகியுள்ளது. 66 வயதான மலேசிய ஆடவர் நேற்று பிற்பகல் 12.55 மணிக்கு கோலாலம்பூர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆருக்கு இதயப் பிரச்சினைகளும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

