மலேசிய கடல் பகுதி அருகே சீனக் கப்பல்

மலேசிய கடல் பகுதி அருகே சீனக் கப்பல்

2 mins read
7ec25860-9820-4efd-8431-87d67cd1ab97
தென்சீனக் கட­லில் சீனா தனது இருப்பை உறு­திப்­ப­டுத்த கிரு­மிப் பர­வல் காலத்­தைப்  பயன்­ப­டுத்­து­கிறது என்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு மத்­தி­யில், சீன அர­சாங்க ஆய்­வுக் கப்­பல் ஒன்று மலே­சி­யா­வுக்கு அருகே தெற்கு நோக்கி நகர்ந்­த­தா­கக் கப்­பல் கண்­கா­ணிப்பு தக­வல் கூறு­கிறது. படம்: எஸ்டி, அல்போன்சஸ் செர்ன் -

கோலா­லம்­பூர்: தென்சீனக் கட­லில் சீனா தனது இருப்பை உறு­திப்­ப­டுத்த கிரு­மிப் பர­வல் காலத்­தைப் பயன்­ப­டுத்­து­கிறது என்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு மத்­தி­யில், சீன அர­சாங்க ஆய்­வுக் கப்­பல் ஒன்று மலே­சி­யா­வுக்கு அருகே தெற்கு நோக்கி நகர்ந்­த­தா­கக் கப்­பல் கண்­கா­ணிப்பு தக­வல் கூறு­கிறது.

ஹையாங் திஜி 8 என்ற அந்­தக் கப்­பல் இந்த வாரம் வியட்­னா­மில் காணப்­பட்­டது. நேற்று அக்­கப்­பல் புருணை, மலே­சியா கடற்­க­ரை­யி­லி­ருந்து 35 கி.மீ தூரத்­தில் ஓர் ஆய்­வைத் தொடங்­கி­ய­தா­கத் கப்­ப­லைக் கண்­கா­ணிக்­கும், மரைன் டிரா­ஃபிக் என்ற வலைத்­த­ளத்­தின் தக­வல்­கள் கூறு­கின்­றன.

இது மலே­சி­யா­வின் முக்கிய பொரு­ளா­தார மண்­ட­லத்­திற்கு வடக்கே, வியட்­னாம், மலே­சியா ஆகிய நாடு­க­ளால் உரிமை கோரப்­பட்ட கடல் பகு­திக்கு அருகே காணப்­பட்­டது.

மலே­சிய கட­லோர காவல்­படை கப்­ப­லான கே.எம்.பெக்­கன் சீனக் கப்­ப­லைப் பின்­தொ­டர்­வ­தாக மலே­சிய கடல்­சார் வட்­டா­ரம் தெரி­வித்­துள்­ளது.

ஆய்­வுக் கப்­பல் ஏழு சீனக் கட­லோர காவற்­படை கப்­பல்­க­ளால் பாது­காக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல் அறித்த வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

சீனக் கப்­பல் வழக்­க­மான நட­வ­டிக்­கை­க­ளை­த்தான் மேற்­கொண்டு வரு­வ­தாக சொன்ன சீன வெளி­யு­றவு அமைச்­சக செய்­தித் தொடர்­பா­ளர் ஒரு­வர், பெய்­ஜிங் மீது பொய் குற்­றம்­சாட்ட அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் தென்சீனக் கடல் பிரச்­சி­னையை பயன்­ப­டுத்­து­வ­தா­க­வும் சாடி­னார்.

கொரோனா கிரு­மிப் பர­வ­லின் வேகத்­தைக் கட்­டுப்­ப­டுத்த தென்­கி­ழக்கு ஆசிய நாடு­கள் விதித்த நட­மாட்­டத் தடை­க­ளுக்கு மத்­தி­யில் தென்சீனக் கட­லில் ஹையாங் திஜி 8 காணப்­ப­டு­கிறது.

எல்லைப் பிரச்­சினை தொடர்­பில், பிற நாடு­க­ளின் கவ­னச்­சி­த­ற­லைப் பயன்­ப­டுத்­திக் கொள்­வதை நிறுத்­தும்­ப­டி­யும் கிரு­மித்தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் கவ­னம் செலுத்­தும்­ப­டி­யும் அமெ­ரிக்கா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இதற்­கி­டையே, குறைந்த தாக் கத்­தை­யு­டைய நிலத்­தடி அணு­வா­யுத சோத­னை­களை சீனா ரக­சி­ய­மாக நடத்­தி­யி­ருக்­க­லாம் என்று அமெ­ரிக்க வெளி­யு­ற­வுத்­துறை கூறி­யுள்­ளது.