தென்கொரியாவில் ஆளும் கட்சி வெற்றி

தென்கொரியாவில் ஆளும் கட்சி வெற்றி

1 mins read
6ec14adf-134e-40d8-bf91-196539bedfbc
தென்­கொ­ரி­யா­வில் புதன்­கி­ழ­மை­யன்று நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தென்­கொ­ரிய அதி­பர் மூன் ஜே இன் (படம்) தலை­மை­யி­லான ஆளும் கட்சி வெற்றி பெற்­றுள்­ளது. படம்: ஏஎப்பி -

சோல்: கொரோனா கிரு­மிப் பர­வல் கார­ண­மாக உலக நாடு­கள் பல்­வேறு முக்­கிய நிகழ்­வு­க­ளைத் தள்ளிவைத்­துள்ள நிலை­யில், அனை­வ­ருக்­கும் வியப்பை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் தென்­கொ­ரி­யா­வில் புதன்­கி­ழ­மை­யன்று நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தென்­கொ­ரிய அதி­பர் மூன் ஜே இன் (படம்) தலை­மை­யி­லான ஆளும் கட்சி வெற்றி பெற்­றுள்­ளது.

கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் வாக்­க­ளிப்­ப­தற்­காக சிறப்பு ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

நாட்­டின் 300 இடங்­களில் நடை­பெற்ற இத்­தேர்­த­லில் 66.2% வாக்­கு­கள் பதி­வா­கின. இது 1992ஆம் ஆண்­டிற்­குப் பிறகு பதி­வான ஆக அதி­க­மான வாக்­குப்­ப­திவு.

மக்­கள் அனை­வ­ரும் கையுறை, முகக்­க­வ­சம் அணிந்து சமூக இடை­வெ­ளி­யைப் பின்­பற்றி வாக்­க­ளித்­த­னர்.

இதில் 163 இடங்­களை வென்ற, தென்­கொ­ரிய அதி­பர் மூன் ஜே இன் தலை­மை­யி­லான ஜன­நா­ய­கக் கட்சி வெற்றி பெற்­றுள்­ள­தா­கத் தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

கடந்த ஜன­வரி மாதத்­தில் அதி­பர் மூன்­னிற்கு வெற்றி வாய்ப்பு குறை­வாக உள்­ள­தாக கணிக்­கப்­பட்ட நிலை­யில், கிரு­மித்­தொற்று பர­வ­லைத் திற­மை­யா­கக் கையாண்டு கட்­டுப்­ப­டுத்­தி­ய­தன் விளை­வாக மூன் ஜே இன்­னுக்கு கொரிய மக்­கள் வெற்­றியை அளித்­துள்­ள­தாக தென்­கொ­ரிய ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

தென்­கொ­ரி­யா­வில் கடந்த பிப்­ர­வரி மாதத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்­றில் தாக்­கம் அதி­க­மாக இருந்த நிலை­யில், பல்­வேறு தடுப்பு நட­வ­டிக்­கை­களை அந்­நாடு மேற்­கொண்­டது. தற்­போது நோய் தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் தென்­கொ­ரியா வெற்றி கண்­டுள்­ளது.

கொரோனா தொற்று கார­ண­மாக தென்­கொ­ரி­யா­வில் 10,591 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். 225 பேர் பலி­யா­கி­னர்.