பிரான்ஸ் கடற்படை கப்பலில் 600 பேருக்குத் தொற்று

பிரான்ஸ் கடற்படை கப்பலில் 600 பேருக்குத் தொற்று

1 mins read
23f3985b-619c-4943-beb9-57c1407accfb
தொற்றுக்குள்ளான சுமார் 31 பேர் பிரான்சின் டூலேன் நகரில் உள்ள செயின்ட் அன்னே ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டுள்ளனர். கடற்படை மருத்துவ ஊழியர் ஒருவர் கப்பலில் இருந்த மாலுமிகளுக்குப் பரிசோதனை செய்கிறார். படம்: இபிஏ. -

பிரான்சின் சார்லஸ் டி கோல்லின் என்ற விமானந்தாங்கி கப்பல் மற்றும் அதன் துணை கப்பல்களில் இருந்த 1,767 பேருக்கும் கிருமித்தொற்று பரிசோதனை செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர்களில் 668 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டின் ஆயுதப்படை அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளான சுமார் 31 பேர் பிரான்சின் டூலேன் நகரில் உள்ள செயின்ட் அன்னே ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். கடற்படை மருத்துவ ஊழியர் ஒருவர் கப்பலில் இருந்த மாலுமிகளுக்குப் பரிசோதனை செய்கிறார். படம்: இபிஏ.