ஆஸ்திரேலியாவில் முடக்க நிலை நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவில் முடக்க நிலை நீட்டிப்பு

1 mins read
d3b66c9a-d369-47f7-9268-9eea04dc961a
புதிய  கிருமித் தொற்று சம்பவங்களை தூண்டக்கூடும் என்ற யூகங்களுக்கு மத்தியில் அடுத்த நான்கு வாரங்களுக்கு முடக்க நிலை நீட்டிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். படம்: இபிஏ -

சிட்னி: இயல்புநிலைக்கு விரைவாக திரும்புவது, புதிய கிருமித் தொற்று சம்பவங்களை தூண்டக்கூடும் என்ற யூகங்களுக்கு மத்தியில் அடுத்த நான்கு வாரங்களுக்கு முடக்க நிலை நீட்டிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

பல உலக நாடுகள் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளால் தவிக்கும் நிலையில், ஆஸ்திரேலியா தனது எல்லைகளை மூடிவிட்டு கடந்த ஒரு மாதமாக கடுமையான சமூக இடைவெளியை கடைபிடித்ததன் விளைவாக அங்குத் தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது.

இதற்கிடையே, படிப்படியாக பள்ளிகளை மீண்டும் திறக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் மாநில அரசுகளை வலியுறுத்தி

உள்ளது. ஆனால் சில மாநில அரசுகள் இந்த உத்தரவை ஏற்கமறுத்து பள்ளிகளுக்கு விடுமுறையை நீட்டித்துள்ளது.