ஐநா: உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப தடுப்பூசிதான் ஒரே வழி

ஐநா: உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப தடுப்பூசிதான் ஒரே வழி

1 mins read
84d409c2-13b4-495e-b0c9-c575044e2dbf
-

நியூ­யார்க்: கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்­குத் தடுப்­பூசி கண்­டு­பி­டித்­தால் மட்­டுமே உல­க­மும் மக்­களும் இயல்பு­நி­லைக்குத் திரும்­பு­வார்­கள் என ஐநா பொதுச்­செ­ய­லா­ளர் அன்­டோ­னியா குட்­ட­ரஸ் தெரி­வித்­துள்­ளார்.

50க்கும் மேற்­பட்ட ஆப்­பி­ரிக்க உறுப்பு நாடு­க­ளு­டன் காணொளி மூலம் நேற்று ஆலோ­சனை நடத்­தி­ய­போது அவர் இவ்­வாறு சொன்­னார்.

உல­கம் முழு­வ­தை­யும் கொரோனா கிரு­மிப் பர­வல் அச்­சு­றுத்தி வரு­கிறது, 20 லட்­சத்­துக்­கும் அதி­க­மான மக்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்­கள், ஒரு லட்­சத்­துக்­கும் அதி­க­மா­னோர் மாண்­டு­விட்­ட­னர்.

ஐரோப்பா, ஆசிய நாடு­களை அச்­சு­றுத்­திய கொரோனா கிருமி அடுத்­த­தாக ஆப்­பி­ரிக்­கா­வில் பரவத் தொடங்கியுள்ளது. இதைத் தொடக்­கத்­தி­லேய தடுக்­கா­விட்­டால் பேர­ழிவை ஏற்­ப­டுத்திவிடும்.

பாதிக்­கப்­பட்ட அனை­வ­ருக்­கும் உத­வி­கள் கிடைக்க வேண்­டும், பாதிக்­கப்­பட்ட நாடு­கள் வேக­மாக மீண்­டெழ வேண்­டும், உல­க­ள­வில் நலம் பெற, தடுப்­பூசி இருந்­தால்­மட்டுமே அக்­கி­ரு­மி­யைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யும்.

2020ஆம் ஆண்டு இறு­திக்­குள் கொரோனா தடுப்­பூ­சி­யைக் கண்­டு­பி­டிக்க அனைத்து நாடு­களும் ஒற்­று­மை­யாக, ஒருங்­கி­ணைந்து, அதி­க­பட்­ச­மான வேகத்­தில் செயல்­ப­டு­வது அவ­சி­யம்," என்­றார் குட்­ட­ரெஸ்.