தெஹ்ரான்: ஈரானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அரசு கூறிய எண்ணிக்கையைவிட 8 முதல் 10 விழுக்காடு அதிகமாக இருக்கும் என்று நாடாளுமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஈரானில் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஈரான் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு வழங்கிய புள்ளிவிவரங்கள் அடிப்படையில், ஈரான் நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள இவ்வறிக்கை சரியாக இருப்பின் உலக நாடுகளிலேயே கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் மாறும்.
இச்சூழலில் அமெரிக்கா அளிக்கவிருந்த மருத்துவ உதவிகளை ஏற்க ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி மறுத்துவிட்டார்.

