பெய்ஜிங்: கொரோனா கிருமி தோன்றிய வூஹான் நகரில் அந்த கிருமியால் அந்த நகரில் உயிரிழந் தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது.
கிருமியால் பாதிக்கப்பட்டவர் களில் 2,579 பேர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆயிரம் பேர் அதிகமாக, அதாவது மொத்தம் 3,869 பேர் இறந்து விட்டதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 325 கூடி 50,333ஆகியுள்ளது.
இதனால் சீனா முழுவதும் கிருமிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 4,600க்கு மேல் கூடியுள்ளது.
நாடு முழுவதும் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களும் 83,000ஐத் தாண்டியுள்ளது.
வூஹான் நகரில் கொரோனா கிருமி கட்டுக்குள் இருப்பதாக ஹுபெய் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுப்பாடுகளும் அங்கு படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் போதுமான படுக்கைகள், மருந்துகள் இல்லாமல் மருத்துவமனைகள் சிரமத்தில் இருந்ததால் பலியானவர்களின் எண்ணிக்கை தவறாக கணக்கிடப்பட்டது. மற்ற மருத்துவ நிலையங்களும் உடனடியாக தகவல்களை தெரிவிக்கவில்லை.
சில நோயாளிகள் மருத்துவ மனைகளில் சேர்க்காமல் வீட்டில் இறந்துவிட்டனர் என்று வூஹான் நகர நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்தின் அறிக்கை தெரிவித்தது.
இந்த நிலையில் புதிய மரண எண்ணிக்கையால் வூஹான் நகர மரண விகிதமும் 7.7 விழுக்காடு கூடியுள்ளது.
கடந்த மாதம் எட்டு இறுதிச் சடங்கு நடைபெற்ற இடங்களில் அஸ்தியைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் ஏராளமானோர் காத்திருந்தனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதைவிட கூடுதலாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் மரணமடைந்த வர்களின் எண்ணிக்கையை வூஹான் நகர அதிகாரிகள் திருத்தி யுள்ளனர்.
வரலாற்றுப் பிழையைத் தவிர்க்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை இடம்பெறுவதாகவும் அவர்கள் கூறினர்.

