மியன்மாரில் 25,000 கைதிகளை விடுவிக்க அரசு திட்டம்

மியன்மாரில் 25,000 கைதிகளை விடுவிக்க அரசு திட்டம்

1 mins read
5043d7ba-2e02-4b7b-98eb-2a46b8c3ba96
யங்­கூன்: மியன்­மா­ரில் புத்­தாண்­டைெ­யாட்டி 25,000 கைதி­களை சிறை­யி­லி­ருந்து விடு­விக்க அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ளது. ஆண்­டு­தோ­றும் புத்­தாண்டு கொண்­டாட்­டத்­தின்­போது கைதி­ க­ளுக்கு பொது­மன்­னிப்பு வழங்கி விடு­விப்­பது வழக்­கம். படம்: ஊடகம் -

யங்­கூன்: மியன்­மா­ரில் புத்­தாண்­டைெ­யாட்டி 25,000 கைதி­களை சிறை­யி­லி­ருந்து விடு­விக்க அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ளது.

ஆண்­டு­தோ­றும் புத்­தாண்டு கொண்­டாட்­டத்­தின்­போது கைதி­ க­ளுக்கு பொது­மன்­னிப்பு வழங்கி விடு­விப்­பது வழக்­கம்.

இந்த ஆண்­டி­லும் அந்த வழக்­கம் பின்­பற்­றப்­ப­டு­கிறது.

நாடு முழு­வ­தும் சிறை­களில் அடைக்­கப்­பட்­டுள்ள 87 வெளி­நாட்­ட­வர்­கள் உட்­பட 24,896 பேர் நிபந்­த­னை­யின்றி விடு­விக்­கப்­ப­டு­வார்­கள் என்று அதி­பர் வின் மியுன்ட் குறிப்­பிட்­டார்.

விடு­விக்­கப்­படும் சிறை கைதி­கள் செய்த குற்­றச் செயல்­கள் பற்றி அவர் தெரி­விக்­க­வில்லை.

புத்­தாண்­டில் ஆயி­ரக்­க­ணக்­கான கைதி­கள் விடு­விக்­கப்­படுவது வழக்கம் என்றாலும் சாதனை அளவில் கைதி­களை விடு­விப்­பது இதுவே முதல்­முறை.

கொரோனா கிருமிப் பர­வல் கார­ண­மாக நாடு முழு­வ­தும் முடக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் சிறை­களில் அள­வுக்கு அதி­க­மாக கைதி­கள் அடைக்­கப்­பட்­டுள்­ள­தால் கிருமி மேலும் பரவா­மல் இருக்க அவர்களை விடு­விக்க வேண்­டும் என்று அனைத்­து­லக மனித உரிமை அமைப்­பு­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

மியன்மாரில் உள்ள சிறை­களில் ஏறக்­கு­றைய 100,000 கைதி­கள் அடைக்­கப்­பட்­டுள்­ள­னர். ஆனால் 62,000 கைதி­க­ளுக்கு மட்­டுமே இட­மி­ருக்­கிறது என்று மனித உரிமை அமைப்­பு­கள் கூறு­கின்­றன.

இந்த நிலை­யில் 25,000 கைதி­களை விடு­விக்க மியன்­மார் அதிபர் ஒப்­பு­தல் அளித்­துள்­ளார்.